தலைமுறை இடைவெளி - பாகம் 3

கிருஷ்ணர் : தலைமுறை இடைவெளி, அறிவிலும், செயலிலும் மட்டுமல்ல.., எல்லாத்துறை technology-யிலும் வந்து விட்டது… அந்தக் காலங்களில், வானத்தை அண்ணாந்து பார்த்து, மேகங்கள் அலைவதையும், பறவைகள் கடந்து போவதையும், காற்றின் சுழற்சியையும், வெறும் கண்ணால் பார்த்து, மழை புயலாக மாறுவதை, துல்லியமாகக் கணித்தார்கள். இத்தனைக்கும் வானவியல் படித்தவன் கூடக் கிடையாது. இயற்கை ஞானம் மட்டுமே… ஆனால், இன்று, satellite அனுப்பும் படத்தைப் பார்த்து, மழை வருவதையும், புயல் சின்னத்தையும் கணக்கிடுகிறார்கள். உங்க அப்பாவுக்கு, கையளவும் புரியும், அதன் கணக்கும் தெரியும்… அதில் பழக்கப்பட்டவரும் கூட… ஆனால், காலத்தின் மாற்றம்… இளம் வயது வேகம்… machinery-யின் comfort… எல்லாம் சேர்ந்து, இடைவெளியை உருவாக்கி விட்டார்கள்; அவ்வளவுதான். நீ இதை விவரிக்கும் போது, கையளவு, கண்ணளவு, அனுபவ அறிவு இவற்றின் துல்லியம் எனக்குப் புரிகிறது….

மேகலா : கிருஷ்ணா…, நீ கையளவு, கண்ணளவு என்றவுடன் எனக்கு இன்னும் ஒரு இடைவெளி நினைவுக்கு வந்து விட்டது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : கண்ணளவில், மற்றுமொரு இடைவெளியா…, அது என்ன…?

மேகலா : கிருஷ்ணா…, அந்தக் காலத்து கல்யாண வீடுகளில் சமைக்கும் chef சமைக்கும் முறையை உன்னிடம் சொல்லியே ஆகணும் கிருஷ்ணா… அதற்கு முன்னால், எங்கள் அம்மா, ஐயாம்மா மற்றும் முன்னோர்கள் எல்லோரும் சமைப்பதற்கு, உப்பு, காரம், புளிப்பு இவையெல்லாம், கண்ணளவு, கையளவு என்ற முறையில்தான் எடுப்பார்கள் கிருஷ்ணா… எங்க அம்மா, அடிக்கடி சொல்ற வார்த்தை, ‘கண்ணு பாத்தா, கை செய்யணும்’ங்கிறதுதான். இது ரொம்ப அர்த்தமுள்ள வார்த்தை கிருஷ்ணா… எங்க அம்மாவுக்கு யார் சொல்லிக் கொடுத்திருப்பாங்க… Institute-லயோ, social media-லயோ கத்துக்கல… அவங்க அம்மா…, அம்மாக்கு அம்மா… பெரிய அளவுல சமையல் பண்ணும் cook இவங்கதானே… ஒருவரைப் பார்த்து, இன்னொருவர் பழகுறது… அப்படிப் பழகும் போது, கண்ணு பாக்குற அளவை சரி பார்த்து கை எடுக்கும்… 1 கிலோ, 2 கிலோ.., சிக்கன், மட்டனைப் பார்த்தா, தன்னாலே உப்பை கை எடுக்கும்… இதுல, கண்ணு பார்க்கிறதைத்தான் கையி எடுக்கும்… சில chef, மட்டன் வேகும் வாசத்தை நுகர்ந்தே, உப்பு போட்டிருக்கு, போடலைன்னு சொல்லிருவாங்க… அதே மாதிரி, புளி சேர்க்கும் குழம்பில், புளியின் அளவு கூடிப் போச்சுனா, காரத்தைக் கூட்டி, புளிப்பை குறைப்பார்கள்… முடிவில் சுவை அபாரமாக இருக்கும்… கண்ணளவு பார்த்து, கையளவு பக்குவம் கொடுக்கும் போது, ஒரு நாளும், சமையலில் பக்குவம் மாறுவதில்லை… அந்த வழிமுறையில் வளர்ந்த எங்களுக்கும் இன்று வரை, 1 கிலோ சிக்கனுக்கு இத்தனை மிளகாய், இத்தனை spoon உப்பு என்று அளவிட்டுச் சொல்ல முடியாது.. ஆனால், கை…, கண்ணு சொல்லச் சொல்ல வேலை பார்க்கும்.. ஆனால், இன்றூ ஒரு சமையலை சமைக்கும் போது…, இவ்வளவு ஏன்… சந்தியா, தன்னுடைய bakery cooking-ல் ஒவ்வொரு recipe-க்கும், clean ஆக measurement… முட்டையை beat பண்ணிய பிறகு, sugar powder, அதன் பின், maida என்று வரிசை மாறாத செய்முறை… இவ்வளவு நேரம் மாவை beat பண்ணணும், இவ்வளவு நேரம் தான் bake பண்ணணும் என்று perfect timing…, சரியான அளவு என்று ஒவ்வொன்றுக்கும் கவனம் தப்பாத முறை வைத்திருப்பாள்… இப்படி cook பண்ணும் போது, எப்ப brownie செய்தாலும், ஒரே நிறம், ஒரே taste என்று சுவையில் தப்பவே தப்பாது… சந்தியா மட்டுமில்லை. இன்றைய தலைமுறையினர் சாம்பார் செய்தாலும், எத்தனை cup பருப்பு, எத்தனை spoon சாம்பார் பொடி என்று கேட்டு, mathematical steps கூடிய problem மாதிரிதான் தெரிந்து கொள்கிறார்கள். ஒருவர் பருப்பை மட்டும் வேக வைக்கச் சொல்வார். இன்னொருவர், பருப்போடு, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வேக வைக்கச் சொல்வார்…. இரண்டும் சரியாத்தான் வரும்… ஆனால், இன்றைய தலைமுறையினர், இதைக் கேட்டு குழம்பி விடுவார்கள். இந்தக் கண்ணளவு, கையளவு இது எல்லாம் இவர்களிடம் செல்லுபடியாகாது. Bits of paper, அதில் சமையல் குறிப்பு இருந்தால்தான் சமைக்க முடியும்..

கிருஷ்ணர் : இந்த ‘கண்ணளவு’ சமையல் இவ்வளவு தூரம் ஆட்டம் கண்டுருச்சா…

மேகலா : கிருஷ்ணா…, இதாவது வீடுகளில் நடக்கும் கண்ணளவும், கையளவும்… கல்யாண வீடுகளில் chef சமைக்கும் முறையை நீ கேட்டிருக்கியா கிருஷ்ணா…. அன்றைய கல்யாண வீட்டு சமையல்காரர், 50 பேருக்கு இவ்வளவு சமைக்கணும்; அதற்கு என்னென்ன சாமான் வாங்கணும்… இந்த 50 பேருக்கான சமையல் எத்தனை பேர் சாப்பிடலாம் என்று ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்தக் கணக்கை துல்லியமாக, இத்தனை கிலோ அரிசி, இத்தனை லிட்டர் பால் அப்படீன்னெல்லாம் சொல்ல மாட்டாங்க… அதில் ஒரு தாயுள்ளம் இருக்கும். நம்மகிட்ட, வாங்கும் பொருள் அளவும், மெனுவும் சொல்லும் போது கூட, 10, 20 பேர் கூடுதலாக வந்தாலும் தாராளமாக சாப்பிடலாம் என்று நமக்கு budget-wise-ம் நம்பிக்கை கொடுப்பாங்க… ஆனால், இன்று எல்லாமே contract தான்… starting 200 பேருக்கு, அதிலிருந்து 250, 300, 350ன்னு ஒரு budget time-table-ஏ போட்டு வச்சிருப்பாங்க… இதில் வாங்க வேண்டிய பொருளின் அளவு, 250 இலைக்கான பணம்…, என்று correct-ஆ bill போட்டுருவாங்க… இதில் A grade, B grade என்று catering quality கூட உண்டு கிருஷ்ணா… இன்றைய கல்யாணத்தில், இத்தனை இலை என்ற கணக்குத்தான். இலையின் எண்ணிக்கை கூடக் கூட, rate-ம் கூடும். இடைவெளி இங்குதான் வருகிறது. இது கல்யாண வீடு மட்டும் கிடையாது. எந்த get-together-க்கும், menu-வுடன் கட்டாயம் rate- பேசப்படும்….

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ! இடைவெளி, budget-ல் நுழைகிறதா…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

கதை கதையாம் காரணமாம் - பாகம் 11

பேச்சுத்தமிழ் - பாகம் 5