Posts

Passion - பாகம் 2

மேகலா   : ‘சிவகாசி சமையல்’ channel ஆரம்பித்த பின்…, frankie கற்றுக் கொள்ளும் அவசியம் வந்தது கிருஷ்ணா… Bangalore-ல் Sheethal, Commercial street-க்குக் கூட்டிச் சென்றாள்… அங்கு, ரோட்டோரக் கடையில் ஒருவர், frankie செய்து கொண்டிருந்தார். ஷீத்தல், மெனக்கெட்டு, frankie செய்வதை watch பண்ணச் சொன்னாள்… சும்மாவே, ரோட்டுக் கடைகளில், பரோட்டா போடுவதை மெய் மறந்து ரசிப்பதுண்டு…. கிருஷ்ணர்  : Sorry…, ஜொள்ளு ஒழுக…, என்று சொல்லு… மேகலா  : அப்படியே இருக்கட்டும்… யாரும் சொல்லாமலேயே…, பரோட்டா செய்வதை வேடிக்கை பார்ப்பவள்…, அன்று ஷீத்தல் சொன்னதும், ஆசை ஆசையாய், frankie செய்முறையை வேடிக்கை பார்த்து…, மறுநாள், மிக அழகாகச் செய்து காட்டினோம்… மறக்காமல், ரோட்டுக்கடை விவரத்தையும் சொல்லித்தான் செய்தோம் கிருஷ்ணா….  எங்கள் channel-ல் நாங்கள் recipies-ஐ செய்து காட்டும் போது…, நான் எப்படிக் கற்றுக் கொண்டேன் என்பதையும் மறைக்காமல்…, மறக்காமல் சொல்லி விடுவேன்…. கிருஷ்ணர்  : Oh! பரவாயில்லை… மேகலா  : எங்கள் channel ஆரம்பித்த கொஞ்ச நாளில், பரவலாக, பலர் மத்தியிலும், எங்களுக்கு ஒரு பெயர் ஏற்பட்டது… ...

Passion - பாகம் 1

மேகலா   : கிருஷ்ணா…., நீ எங்க இருக்க கிருஷ்ணா…. கூப்பிட்டதும் ஓடி வருவியே கிருஷ்ணா…. இன்னம் காணலியே…. கிருஷ்ணர்  : யப்பா…., என்ன சத்தம்…. வெளியில் பனி பெய்து கொண்டிருக்கிறது…, அதை enjoy பண்ணினேன்… இன்று மார்கழி முதல் நாள் அல்லவா… எங்கு திரும்பினாலும்…., ‘திருப்பாவை’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…. நேற்று, ஆண்டாள் கோயிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார் அல்லவா… அதான், கொஞ்சம் லேட்டாயிருச்சி…. சரி…, நீ எதுக்குக் கூப்பிட்ட…. மேகலா  : ஏதாவது தலைப்பில் பேசலாம்னு நினைத்தேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…., என்ன தலைப்பு யோசித்திருக்கிறாய்…. மேகலா  : என்ன தலைப்பில் பேசலாம்னு நீ சொல்லேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ‘Passion’…. அப்படீன்னா…, என்னன்னு தெரியுமா…. மேகலா  : ஒருவருடைய தனித்தன்மை…, தனித் திறமையா…, கிருஷ்ணா…. கிருஷ்ணர்  :  தனித்தன்மையாய் ஒருவரிடம் இருக்கும் தனித் திறமையை செயல்படுத்துவதில் சந்தோஷப்படுவது, ‘passion’ என்று சொல்லலாம்…  அதைப் பற்றிப் பேசலாமா… சரி…, உன்னுடைய passion எதுன்னு சொல்லு பார்ப்போம்… மேகலா  : என்னுடைய passion-ஆ...

தன்னம்பிக்கை - பாகம் 6 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : பாண்டவர்கள் கதை வேறு… எல்லோருக்கும் தெரிந்தே வனவாசம் சென்றார்கள்… பதின்மூன்று வருடங்களாக…, நாடும் நகரமும், நல்லவர்களும் அவர்களுக்காகக் காத்திருந்தனர். ஆனால், ஒரு சிற்றரசரோ…, பேரரசரோ, தன் ஆட்சியைப் பறி கொடுத்தால்…, தலைமறைவு வாழ்க்கையை…, தன் பகுதி மக்களுக்கே தெரியாமல் தான் வாழ முடியும்… உதாரணத்திற்கு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை உனக்குத் தெரியுமா… அவனுடைய இயற்பெயர், ‘மாறவர்மன்’. தன்னுடைய பெயரே, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று மாறுமளவுக்கு, சோழர்களிடமிருந்து தன்னுடைய நாட்டை மீட்பதற்கு, கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பொறுமையாகப் போராடித்தான் அடைந்திருக்கிறான். தன்னுடைய நாடு, சோழர்களிடம் பறி போன பின், 23 ஆண்டு காலம் கழித்துப் போய், அவர்களிடம் பொறுமையாகவா கேட்டுப் பெற்றிருப்பார்… மேகலா  : இல்லை…, ஆனால், எனக்கு, இது எப்படி சாத்தியமாயிற்று என்பதுதான் என் சந்தேகமே… கிருஷ்ணர்  : சரி…, உனக்கு வேற மாதிரி கேள்வி கேட்கிறேன். உன்னுடைய ஒரு பொருளை நீ இழந்திருந்தால்…, அல்லது உன்னால் வாங்க முடியாத பொருளை வாங்க வேண்டும் என்றால், என்ன செய்வாய்…? மேகலா  : கிருஷ்ணா…, என்னைப்...

தன்னம்பிக்கை - பாகம் 5

மேகலா   : கிருஷ்ணா…, எனக்கு ஒரு சந்தேகம் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இப்பவரைக்கும் நல்லாத்தான போய்க்கிட்டு இருக்கு… அதுல என்ன சந்தேகம் வந்தது…. மேகலா  : ஐயோ கிருஷ்ணா… இதுவரைக்கும் பேசுனதுல எனக்கு ஒரு doubt-ம் கிடையாது… என்னோட சந்தேகம்…, ஒரு செயல்திறன் மிக்கவன், தன்னுடைய முயற்சியில் தோத்துப் போனாலோ…, தடைகளை சந்திக்கும் போதோ…, எல்லாவற்றையும் தாண்டி, எப்படி ஜெயிப்பான், அவன், தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வான்… அது கஷ்டமில்லையா… உதாரணத்திற்கு, பாண்டவர்களுக்கு, பன்னிரண்டு வருடம் வனவாசம்…, ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மறுபடியும் தங்கள் உரிமையை மீட்க எப்படி முடியும்… பன்னிரண்டு வருடங்கள் தங்குவதற்கு சரியான வீடு கிடையாது…, சாப்பாடு கிடையாது. காட்டிற்குள் போர்ப்பயிற்சி செய்தார்களா…, தெரியாது. அவர்களுடைய ஒரே நம்பிக்கை, ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தான்… படைபலமோ.., பணபலமோ இல்லாத போது, பின் எப்படி மீண்டு வர முடியும்…? கிருஷ்ணர்  : இறுதியில் நீ சொன்ன வார்த்தை என்ன…? மேகலா  : அவர்களுடைய ஒரே நம்பிக்கை ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தான்… அப்படீன்னு சொன்னேன்… கி...

தன்னம்பிக்கை - பாகம் 4

கிருஷ்ணர்   : இன்னும் ஒரு முறை அவரிடம் (டாக்டர் A. P. J. அப்துல் கலாம்), ’சுனாமி வருவதை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியாதா’ என்று கேட்கப்பட்டது… அதற்கு அவர், ‘சுனாமியை இத்தனை ஆண்டுகளுக்குள் அறவே தடுத்து நிறுத்த முடியும்’ என்று சொல்லவில்லை…   ’சுனாமி வருவதை, முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்… நாம் தான் பாதுகாப்பான இடத்திற்குப் பெயர்ந்து செல்ல வேண்டும்… இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது… இயற்கையை அனுசரித்துத்தான் வாழணும்’  என்று எந்த மழுப்பலும் இல்லாமல், தெளிவாகச் சொல்லுகிறார்…. இன்னும் ஒரு முறை, ‘ஜப்பானின், புகுஷிமா என்ற இடத்தில், அணுமின் உலைப்பேரழிவு ஏற்பட்ட சமயத்தில், நம்முடைய கூடங்குளத்திலும், அணுமின் உலை, ரஷ்யாவுடன் கூட்டு முயற்சியில் உருவாகிக் கொண்டிருந்தது. அதனைத் தடுக்கும் முயற்சியில் பலரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அரசாங்கம்…, நம்முடைய கலாம் ஐயாவை, விளக்கம் கொடுத்து, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டது. அப்பொழுது…, புகுஷிமா உலையை விட, கூடங்குளம் அணுமின் உலை, மின் கசிவு ஏற்படாதபடி, double protection கொடுக்...

தன்னம்பிக்கை - பாகம் 3

கிருஷ்ணர்   : இந்தியாவின் நட்பு நாடுகள், இந்தியாவின் எதிரியை எதிர்க்க ஒன்று சேர்ந்ததுதான் highlight. இதில், பிரதமரின் நேர்மையான அணுகுமுறை, நாட்டுப்பற்று, தேசத்தின் மீது அக்கறை, இதை செயல்படுத்துவதில் அவருக்கிருந்த துணிச்சல்…, துணிச்சலான குழுத் தலைவர்கள்…. மேகலா  : கிருஷ்ணா…, நீ சொல்லச் சொல்ல, அன்று நடந்த நிகழ்ச்சிகள் கண் முன்னே வந்து போகுது கிருஷ்ணா… அதே மாதிரி, article 370 என்ற செயல்முறையும், எத்தனையோ தடைகளை மீறி செயல்படுத்தப்பட்ட அசாத்தியமான துணிச்சலான செயல் கிருஷ்ணா… இதிலும், ஒன்றை நிச்சயம் பாராட்டியே ஆகணும் கிருஷ்ணா…. பாரதப் பிரதமரின், உலக நாட்டுத் தலைவர்களுடன் அவருக்கிருந்த நட்பு…, அதனால் ஏற்பட்ட தொடர்பு, reaction…, இவையெல்லாம் இங்குள்ள பிரச்னையாளர்களை வாயடைக்கச் செய்தது என்பது நிதர்சனமான உண்மை… கிருஷ்ணர்  : ஆமாம்…, நேர்மையும், தைரியமும்…, அதே நேரத்தில், நம்ம நாடு அமைதியாய் இருக்க வேண்டும் என்ற ஆசை, நாட்டு வளர்ச்சி, பாதுகாப்பில் அக்கறை…, இவையெல்லாம், துணிச்சல்…, தான் எடுக்கும் முடிவு தான் சரி என்ற அசாத்தியமான நம்பிக்கையின் வேர்கள்…. மேகலா  : கிருஷ்ணா…, இன்னைக்கு ...

தன்னம்பிக்கை - பாகம் 2

கிருஷ்ணர்   : நீ சொல்லுவதும் சரிதான்… உனக்கு ஒண்ணு தெரியுமா…. ஒரு வகையில் இப்படி over-confident திறமையாளர்களை நான் பாராட்டுகிறேன்… இவர்களின் அலப்பறையினால் தான், அடுத்தடுத்த திறமையாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.   உலகமும், எல்லாத் துறைகளிலும், போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைகிறது…., என்ற அளவில், அகம்பாவம் சரிதான்…  இருந்தாலும்,   தன்னைப் போலவே இன்னொரு திறமையாளனை சகிக்க முடியாதவர்களும் இருக்கிறார்களே… முறையாக வளர வேண்டிய போட்டி மனப்பான்மை…, எதிராளியை அழிக்கும் அளவு கூட போய் விடுகிறது…   சரி, இதைக் கொஞ்ச நேரம் தள்ளி வைப்போம்…, பிறகு பேசலாம். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது…. மேகலா  : கேள்வியும், பதிலுமாய் இருக்கும் என் பரம்பொருளே,…, உனக்கும் கேள்வியா… கிருஷ்ணர்  : இந்தக் கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று நான் தெரிந்து கொள்ளணும்… சில காரியங்களில், துணிச்சலாய் இறங்கினேன் என்று சொல்கிறார்களே… அது என்னென்ன என்று உனக்குத் தெரியுமா…. மேகலா  : கிருஷ்ணா…, ‘அறம்’ என்று ஒரு சினிமா வந்தது நினைவிருக்கிறதா கிருஷ்ணா… அந்தப் படம், நிஜமாக நடந்த...