Posts

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 5

மேகலா   : போய் பார்க்கல கிருஷ்ணா…. Food area Tamil channel-ல் பார்த்தேன் கிருஷ்ணா…. அதிலும், பிரியாணிக்கு ஆடு வாங்குவதிலும் கூட, ஒரு ரகசியம் சொல்லுகிறார்.   ஒரே எடை அளவுள்ள ஆடுகள்தான், எல்லா மட்டன் பீஸ்சும் ஒண்ணு போல வேகும் என்கிறார்.  ஒரு கிலோ பிரியாணிக்கு 400 gm வெங்காயம்…. 800 கிலோ பிரியாணிக்கு தேவையான வெங்காயம், அதற்கான தக்காளி, இஞ்சி பூண்டு paste என்று 1 நாள் முன்பே வாங்கி, வெட்டி ready பண்ணிக் கொள்ளணும்… இந்த மாதிரி cut பண்ணுவது, அரைத்து வைப்பது என்பதெல்லாம், ready பண்ணுவது மாதிரியே பிரியாணி பண்ணும் area-வைத் தனியாக select செய்து, இரண்டு வரிசைகளில் அடுப்புக்களை ready பண்ணுகிறார்கள்…. வெங்காயம், மசாலா, chicken piece போட்டு பிரியாணி பண்ணுவதற்கு 8 தேக்சா என்றால், அரிசியை 60% வேக்காடு போடுவதற்கு நான்கு தேக்சா என்ற கணக்கில், வரிசையாக அடுப்பு ready பண்ணி, போர் வீரர்கள் மாதிரி தேக்சாவை நிறுத்தி வைத்து விடுகிறார்கள்…. எப்போ தெரியுமா….?   பிரியாணி செய்யும் நாளுக்கு முந்தைய நாள் மதியம் 3 மணிக்கெல்லாம், தேக்சாக்களெல்லாம் சிப்பாய் மாதிரி அணி வகுத்து நிற்கிறது. அடுப்பில் வி...

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 4

மேகலா   : Snacks-க்கு மட்டும் தனியா class இருக்கான்னு தெரியல கிருஷ்ணா…. ஆனால், எல்லா chef-ம், எல்லா snacks-ம் channel-ல்ல செய்து காட்டுகிறார்கள். ‘வெங்கடேஷ் பட்’ என்ற chef தன்னோட channel-ல்ல சொன்னது இதுதான் கிருஷ்ணா….   ‘செட்டிநாட்டு உணவான வெள்ளை அப்பம், கந்தரப்பம் என்ற பலகாரத்தைக் கற்பதற்கு, காரைக்குடியில் ஒரு ஆச்சி வீட்டுக்குச் சென்று, தவமாய்த் தவமிருந்து கற்றுக் கொண்டேன்’  என்பதுதான் கிருஷ்ணா… மற்றப்படி, catering course-ல், snacks item சொல்லித் தருகிறார்களா என்பது தெரியவில்லை கிருஷ்ணா…. ஒருவேளை, பெரிய அளவில் செய்பவர்களிடம், குருகுலம் மாதிரி வேலையில் சேர்ந்து முழுவதுமாகக் கற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன் கிருஷ்ணா… ஆனாலும்,   interest இருக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய கைப்பக்குவத்தை நம்பித்தான் செய்கிறார்கள். அது எல்லோருக்கும் பிடிச்சிப்போன பிறகுதான், அதைப் பெரிய அளவில் செய்கிறார்கள்.   எனக்குத் தெரிஞ்ச ஒரு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, பட்டறை மாதிரி போட்டு, தன் கைப்பக்குவத்தால் மட்டுமே, சேவு, மிக்சர், முறுக்கு, மைசூர்பாக், லட்டு என்று செய்து, முழுநேர தொழி...

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 3

மேகலா   : கிருஷ்ணா…., இந்த snacks செய்து அசத்தும் குடும்பத் தலைவிகள் ஒருபுறம் இருக்க…, இன்று பெண் குழந்தைகள், கல்யாணத்துக்குப் பிறகு தன் profession-ஐ வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று யோசிக்கிறார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…, ஆச்சரியமா இருக்கே….  இந்த வத்தல், வடாம் செய்வதில் youngsters அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களா…. மேகலா  : வத்தல்…., வடகம் செய்வதற்கு எல்லாம்…., கொஞ்சம் experience வந்த பிறகு…., குடும்பத் தலைவியான பிறகு…., ’எல்லாம் என் கைப்பக்குவத்தில்தான் செய்ய வேண்டும்’ என்ற வயசு வரும் போது தான் சிந்திப்பார்கள் கிருஷ்ணா…. நான் சொல்வது, baking சமாச்சாரம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! Correct….., correct….. சந்தியா கூட, B. B. A. முடிச்சிட்டு…., baking unit-ல தான படிச்சாள்…. நான் மறந்தே போனேன் மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…, traditional சமையலில்…., ‘எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க…., அம்மா சொல்லிக் கொடுத்தாங்க…. கண்ணளவு…., கையளவு…., குத்துமதிப்பு…., ருசி’ என்பதுதான் பிரதானமான ரகசியமாக இருக்கும்….  ஆனால், baking course படிக்கும் போது, ‘கையளவு’...

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 2

மேகலா   : நிச்சயமாக கிருஷ்ணா…. இன்றைய பெரிய பெரிய branded மசாலா பொடிகள் எல்லாம், முதன் முதலில் வீட்டிலிருக்கும் பெண்கள், சிறு முதலீடுகளில் ஆரம்பித்ததுதான் கிருஷ்ணா… சென்னையில், கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் ஒரு அப்பளக்கடை இருக்கும் கிருஷ்ணா… அந்தக் கடையில் இன்று வித விதமான size-களில், வித விதமான சுவைகளில் அப்பளம், வத்தல், கூழ்வடகம்…., இன்னும் ஊறுகாய், தக்காளித் தொக்கு, வத்தக் குழம்பு என்று பலவிதமான உணவுப்பண்டங்கள் இருக்கின்றன கிருஷ்ணா. இந்தக் கடை உரிமையாளர்கள், ஆரம்பத்தில் சின்ன லெவலில் அப்பளம், வடகம் தயாரித்து விற்கும் தொழில்தான் செய்தார்கள்.   அவர்களுடைய அப்பளம் பொரியும் போதே, அதன் வாசம் நம்மை சாப்பிடத் தூண்டும்…  அந்த சுவைதான், இன்று பெரிய கடை நிறுவி, கைகளால் செய்யும் வத்தல், வடகம், ஊறுகாய் என்று பல உணவுப் பொருட்களும் மக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது கிருஷ்ணா. இவர்களுடைய products தமிழ்நாடு முழுக்க supply-யும் பண்ணப்படுகிறது கிருஷ்ணா. முதலில் அப்பளம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது…. இன்று இங்கு பல வித instant உணவுப் பொருட்கள் மட்டுமல்ல…., சாம்பார் பொடி, இட்லிப் பொடி...

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…., மார்கழி மாதம் பிறந்திருச்சி… மாதங்களில் நான் ‘மார்கழி’ என்று நீ சொன்னாயா… இந்த மார்கழிக் குளிர் என்னை இதமாக வருடும் போது, கிருஷ்ணா…., உன் புன்னகை என்னை இதமாக வருடுவதாக உணர்கிறேன்.   ஆண்டு முழுவதும் மார்கழி மாதமே தொடரக் கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது.  காரில் பயணம் செய்யும் பொழுது, சாலை இருமருங்கிலும், பச்சைப் பசேலென பயிர் பச்சைகள் செழித்திருப்பதைப் பார்க்கும் போது, உலகமெங்கும் கிருஷ்ணா, உன் அழகே படர்ந்திருப்பதாய் உணர்கிறேன். ஆங்காங்கே சின்னச் சின்ன குளங்களும், அதில் தெளிவாய்த் தேங்கி நிற்கும் நீர்த்தேக்கமும்…., குளங்களைத் தொடர்ந்து ஓடும் சின்னச் சின்ன ஓடைகளும், கார்த்திகை, மார்கழி மாதங்களுக்கென்றே பிரத்யேகமாக சிருஷ்டிக்கப்பட்டதோ என்று வியக்க வைக்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Good morning மேகலா…. என்ன வரும் போதே பீடிகை பலமாக இருக்கிறது… இன்று என்ன…., மார்கழி மாத திருப்பாவை பற்றி பேசப் போகிறாயா…. மேகலா  : Oh! அது கூட பேசலாமோ…. இருந்தாலும், நான் பேச வந்தது…. “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ – என்ற தலைப்பில்...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 11 (நிறைவுப் பகுதி)

மேகலா   : வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்க்கும் bachelors, சமையல் செய்யத் தெரியாத, புதுசா கல்யாணம் பண்ணிய சின்னப்பொண்ணுங்கள் என்று இவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பித்தோம் கிருஷ்ணா…. இன்று பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh….! முதலில், பத்து ஆண்டுகளாகும் இந்த service-க்கு வாழ்த்துக்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னயே, அதுவும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த நீ, online மூலமாக சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டாய். பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று ஒரு சாரார் online shopping-ஐயும், online teaching-ஐயும் பாராட்டிக் கொண்டிருக்கும் போது உனக்கு மட்டும் குற்றமாகத் தெரிகிறதா…. ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ….  மக்கள் தொகை பெருகி வரும் இந்தக் காலத்தில், traffic நெருக்கடி’…., இல்லையில்லை jam ஆகி, இன்னும் மோசமாகி விடுமோ என்ற சூழ்நிலையில், அதற்கான ஒரு சின்ன solution தான் இந்த வசதி…. Online வசதிகளெல்லாம் காலத்தின் கட்டாயம்…. மேகலா  : ஏன் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோம்…. அதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா…. கிரு...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 10

மேகலா  : அந்தக் காலங்களில், நாங்க எல்லாம் எங்காவது வெளியூருக்குச் செல்லணும் என்றால், அதாவது, எங்க அப்பா எங்களை மதுரைக்குக் கூட்டிச் செல்வார்….. விருதுநகர் கூட்டிச் செல்வார்…. மொத்தப் பேரும் எங்க ‘அம்பாசிடர்’ காரில்தான் செல்வோம்… அம்பாசிடர் கார் ஏழெட்டுப் பிள்ளைகளைச் சுமந்து செல்லும்படிக்கு வடிவமைக்கப்பட்ட கார்…… கார் வைத்திருப்பவர்கள் அனைவரும், 90% அம்பாசிடர் கார் தான் வைத்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் உண்டோ, …, அனைவரும் ஒரே காரில் தான் செல்வார்கள்.. உறவுகளோடு ஒரே வண்டியில் பயணம் செய்வது செம ஜாலியாக இருக்கும்…. ஆனால், இந்தக் காலங்களில், மாருதி 800-லிலிருந்து……, Innova car வரைக்கும், 4 seater car, 7 seater car என்று சொல்லித்தான் விற்பனையே செய்கிறார்கள். கார் என்னவோ பார்ப்பதற்கு ‘லாரி’ மாதிரி இருந்தாலும், 4 seater car-னா, அதுக்கு மேல ஒரு பச்சப்புள்ளையக் கூட காரில் உட்கார வைக்க முடியாதபடிதான் காரை வடிவமைக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 2 பையன், மருமகள் இருந்தால், ஆளுக்கொரு காரில் செல்வதுதான் இன்றைய நடைமுறையாக இருக்கிறது. உறவுகள் எல்லோரும் ஒரே காரில் travel செய்து குதூக...