ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 58
மேகலா : குருக்ஷேத்திரப் போரின் நான்காம் நாள் யுத்தத்தின் போது, பாண்டவர்கள் கை ஓங்கியிருப்பதைக் கண்ட துரியோதனன், பீஷ்மரிடம், ‘எந்த பலத்தினால் அவர்கள் (பாண்டவர்கள்) நம்மை விட மிஞ்சி நிற்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை’ என்று மனம் புழுங்கிக் கேட்டதும், பீஷ்மர், ‘துரியோதனா! கிருஷ்ண பகவானால் காக்கப்பட்டிருக்கிற பாண்டவர்களை வெல்லும் திறமையுடையவர்கள் இப்பூவுலகில் யாரும் கிடையாது. நீ தர்மங்களை அறிந்தவன். உனக்கு ஒரு விவரம் கூறுகிறேன்’ என்று சொல்லி, ‘விச்வோபாக்யானம்’ என்ற மகத்தான சரித்திரத்தைச் சொல்லி, ஸ்ரீ கிருஷ்ணரின் மேன்மையை துரியோதனனுக்கு விளக்கினார். பால பருவத்திலேயே, தன்னைச் சுற்றியிருந்த பிள்ளைகளுக்கு, ‘காளிங்கன்’ என்னும் பாம்பினால் துன்பம் ஏற்படுவதைத் தடுக்க நினைத்து, அந்தக் காளிங்கனை அடக்கி, யாதவ குலத்து மக்களைக் காப்பாற்றியவர். பெரும் மழை பெய்து, கோகுலமே வெள்ளத்தால் காணாமல் போகுமோ என்றிருந்த நிலையில், ஆடுகளையும், ஆநிரைகளையும், தன்னை அண்டிய ‘யது குலத்தையும்’ காத்தருள்வதற்காக, தன் சுண்டு விரலால், ‘கோவர்த்தன மலையையே’ குடையாகப் பிடித்து, ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு நாட்கள் நின்ற நிலைய