திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 1

மேகலா : கிருஷ்ணா…, கிருஷ்ணா…

கிருஷ்ணர் : என்னம்மா மேகலா…, உங்க ஊருல திருவிழாலாம் முடிஞ்சிருச்சா… இப்பத்தான் எழுதணும்னு நெனப்பு வந்துச்சாக்கும்… ராமாயணமாவது படிச்சியா… ராமநவமி கூட இப்பத்தான் முடிஞ்சிது…

மேகலா : கிருஷ்ணா…, ராமநவமி ஆரம்பிக்கும் போது, விசுவாமித்திரர் கதை படிச்சேன்… நவமி நிறைவு நேரத்தில், பரசுராமரிடம் இருந்த விஷ்ணு வில்லை ராமர் முறித்த கதையைப் படித்து சந்தோஷமடைந்தேன் கிருஷ்ணா… அப்பப்ப சோர்வாயிருந்தாலும், திருக்குறள் எழுதுவதையும்…, ராமாயணம் படிப்பதையும் விடல கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…, இப்ப இங்க என்ன வந்திருக்கிற… ஏதாவது அரட்டையா…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… ‘வாழ்வியலும் வள்ளுவரும்’ என்ற தலைப்பைக் கூட யோசிச்சிட்டேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஓ! தலைப்பே அமர்க்களமாயிருக்கே… 1330 குறளிலும் வாழ்வியல் பாடம் எடுத்திருக்காரு…. அத்தனையுமா சொல்லப் போற….

மேகலா : இல்ல கிருஷ்ணா… ஒரு 5 அல்லது 10 குறளை மட்டும் எடுத்து எழுதப் போகிறேன்…

கிருஷ்ணர் : ஓ! அப்படியா… சிறப்பா எழுது… உனக்கு எப்படி, திருக்குறளில் வாழ்வியல் எழுதணும்னு தோணுச்சி…

மேகலா : அதுவா கிருஷ்ணா… இப்போ தினமும் திருக்குறள் விளக்கம் எழுதுறேன்ல…

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்’

‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்’

என்ற குறளையெல்லாம் எழுதும் போது…, நான் புதுசா படிக்கிறேன் கிருஷ்ணா… ஒரு மனிதன் நல்லபடியாக வாழ்வதற்கு, எக்கச்சக்கமான வழிகளை, நுணுக்கமான வாழ்வியல் கருத்துக்களையும் படிக்கப் படிக்க…, ஒரு சின்ன short story-யா திருக்குறளில் வாழ்வியல் எழுதுவோம் என்று தோன்றியது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Very good… இதை எழுதுவதற்கு முயற்சி எடுப்பதே நல்ல விஷயம்… நீ எவ்வளவு சிறப்பாக எழுதினாலும், வள்ளுவரோட குறளின் அருகில் கூட வர முடியாது… இருந்தாலும், கொஞ்சம் எழுதினாலும், அது பூரண வடிவமாகத்தான் இருக்கும்… அப்படி எழுதணும்…

மேகலா : Okay கிருஷ்ணா… உன் blessings இருந்தால், கட்டாயம் நல்லா எழுதுவேன் கிருஷ்ணா… கிருஷ்ணா…, நீ ஏதாவது கேள்வி கேளேன்… அப்படியே நான் ஆரம்பிச்சிருவேன்…

கிருஷ்ணர் : Oh! Staring trouble-ஆ… சரி…, மனிதர்களில், பெரிய மனுஷன்கிறது யாரு… என்ன செஞ்சா.., அவனை பெரிய மனுஷன், திறமையாளன்னு சொல்றோம்…

மேகலா : கிருஷ்ணா…, பெரிய மனுஷங்க, வயசால குறிப்பிடப்படுறவங்க இல்ல…

‘செயற்கரிய செய்வர் பெரியர்; சிறியர்

செயற்கரிய செய்கலாதவர்’

கிருஷ்ணர் : எப்படி…?

மேகலா : கிருஷ்ணா…, யாராலும் செய்ய முடியாத செயற்கரிய செயலைச் செய்பவர்தான் பெரியோர்… உலகத்திலுள்ள அனைத்து விஞ்ஞானிகளிலும், செயற்கரிய செயலை செய்து காட்டியவர், நமது முன்னாள் ஜனாதிபதி Honorable Dr. A. P. J. Abdul Kalam ஐயா அவர்கள்… அவர், பெரியார். அதை விட simple-ஆ சொல்லணும்னா, விவசாயம் என்று எடுத்தால்…, இயற்கை உரம் போட்டு, சிறந்த உழைப்பைப் போட்டு, அதிக மகசூல் காட்டும் விவசாயி…, எல்லோராலும் கை விடப்பட்ட நோயாளியை, பக்குவமாக மருத்துவம் பார்த்து, உயிர் பிழைக்கச் செய்யும் மருத்துவர், ஒரு சிறந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி, காலுக்கு அளவாக, மிருதுவாக, வலுவாக, மிக நேர்த்தியாக செருப்பைத் தைத்து கொடுக்கிறார்…. இப்பேர்ப்பட்ட, மற்றவர்களை விட திறமையாக செயலை செய்பவர்கள்…, பெரியார். அதைச் செய்யத் தெரியாதவர்கள், முடியாதவர்…, சிறியார்…, என்று ஒரு மனிதனை வடிவமைக்கிறார் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஓ! வாவ்! எந்தத் துறையாய் இருந்தாலும், best-ஆக வேலை செய்வது என்று, simple-ஆ எடுத்துக் கொள்ளலாம். அப்படீன்னா, ‘செயற்கரிய செயல்’ என்றால், மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக செய்பவர்கள், பெரியார்… வாவ்! அழகான குறள்…, அருமையான அர்த்தம்… இப்படிப்பட்ட அறிவில் பெரியோர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்… அவரைக் கைப்பிடிக்கும் துணை நலம், எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

பக்குவம் - பாகம் 8