தலைமுறை இடைவெளி - பாகம் 4
கிருஷ்ணர் : ஓஹ்ஹோ! இடைவெளி, budget-ல் நுழைகிறதா….? மேகலா : அது மட்டுமில்லை கிருஷ்ணா… ஒரு chef எந்த சமையலில் ‘கில்லி’ என்று அவர்களுக்குள் ஒரு முத்திரை வச்சிருப்பாங்க… அவங்க அவங்க அந்த சமையலின் pre-work ஆரம்பிச்சிருவாங்க… முதலில் அடுப்புக்கு முன் வந்து சாமியக் கும்பிட்ட பிறகு, ரொம்ப அசால்ட்டா…, 3 நாளைக்கு வேணுங்கிற மசாலா பொருட்களை ஒருவர் ready பண்ணுவார்… ஒருவர் வெங்காயம் மட்டும் நறுக்குவார். 4 கிலோ வெங்காயம்ங்கிற கணக்கெல்லாம் கிடையாது… குத்துமதிப்பா வெட்டிக்கிட்டே இருப்பார்… ஒருவர் சாம்பாருக்கு மசாலா உரலில் இடிப்பார்… ஒருவர் காய்கறி வெட்டுவார்… இதை எல்லாவற்றையும் விட, பெரிய chef அடுப்பு முன் வந்து, ஒரு stool-ல் உட்கார்ந்து கொண்டு, எந்த அளவும் இல்லாம எண்ணெய் ஊற்றுவதும், காய்கறிகளை வதக்குவதும், ஒரு சினிமா காட்சி போல சுவாரஸ்யமாக இருக்கும்… இதில் அளவாய் எடுத்துப் போடுவதற்கு நாழியோ, படியோ கிடையாது… உப்பு போடுவது கூட, கண்ணளவும், கையளவும் தான்… கிருஷ்ணர் : மேகலா…, உனக்கு ஒண்ணு தெரியுமா… ஒரு தேக்சா நிறைய சாம்பாருக்கு, உப்பு, chef கையால் 1 கையும், 1 பிடியும் என்ற கணக்கு இருக்கும்…. நீ சொல்லுவத...