தலைமுறை இடைவெளி - பாகம் 4

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ! இடைவெளி, budget-ல் நுழைகிறதா….?

மேகலா : அது மட்டுமில்லை கிருஷ்ணா… ஒரு chef எந்த சமையலில் ‘கில்லி’ என்று அவர்களுக்குள் ஒரு முத்திரை வச்சிருப்பாங்க… அவங்க அவங்க அந்த சமையலின் pre-work ஆரம்பிச்சிருவாங்க… முதலில் அடுப்புக்கு முன் வந்து சாமியக் கும்பிட்ட பிறகு, ரொம்ப அசால்ட்டா…, 3 நாளைக்கு வேணுங்கிற மசாலா பொருட்களை ஒருவர் ready பண்ணுவார்… ஒருவர் வெங்காயம் மட்டும் நறுக்குவார். 4 கிலோ வெங்காயம்ங்கிற கணக்கெல்லாம் கிடையாது… குத்துமதிப்பா வெட்டிக்கிட்டே இருப்பார்… ஒருவர் சாம்பாருக்கு மசாலா உரலில் இடிப்பார்… ஒருவர் காய்கறி வெட்டுவார்… இதை எல்லாவற்றையும் விட, பெரிய chef அடுப்பு முன் வந்து, ஒரு stool-ல் உட்கார்ந்து கொண்டு, எந்த அளவும் இல்லாம எண்ணெய் ஊற்றுவதும், காய்கறிகளை வதக்குவதும், ஒரு சினிமா காட்சி போல சுவாரஸ்யமாக இருக்கும்… இதில் அளவாய் எடுத்துப் போடுவதற்கு நாழியோ, படியோ கிடையாது… உப்பு போடுவது கூட, கண்ணளவும், கையளவும் தான்…

கிருஷ்ணர் : மேகலா…, உனக்கு ஒண்ணு தெரியுமா… ஒரு தேக்சா நிறைய சாம்பாருக்கு, உப்பு, chef கையால் 1 கையும், 1 பிடியும் என்ற கணக்கு இருக்கும்…. நீ சொல்லுவது குத்துமதிப்பு… ஆனால், இது அனுபவக் கணக்கு. ஒரு கும்பா புளி, 1 1/2 கை உப்பு, காய்கறி, பருப்பு சேர்த்தால், ஒரு தேக்சா சாம்பார்… இது நடைமுறை கணக்கு. இந்த method-ல், நேற்று, இன்று, நாளையும் இடைவெளி வராது… கற்றுக் கொள்ளும் திறனிலும், contract-ல், இலைக்கணக்குக்கு இவ்வளவு என்று contract பேசுவதிலும் தான் இடைவெளி…

மேகலா : நான் என்னவோ இடைவெளி சமையலில் இருக்கும் என்று நெனச்சி பேசுனா…, நீ பொசுக்குனு, சமையலில் கையளவுங்கிறது, அனுபவ measurement-ன்னு படக்குனு போட்டு உடைச்சிட்டியே… ஆனாலும், நீ சொல்லுவதுதான் correct கிருஷ்ணா…

கிருஷ்ணர் : முந்தைய தலைமுறை, நேற்றைய தலைமுறை, இன்றைய தலைமுறை…, நாளைய தலைமுறை கூட, practical அனுபவம் அப்படீங்கிறது, மிகப் பெரிய அறிவு. தாமஸ் ஆல்வா எடிசன் கூட, தன்னுடைய இலக்கை அடைய, பல தவறுகளைச் செய்து, அதை மாற்றி, பிறகும் தப்பு நேர்ந்து, அதையும் மாற்றி…, இப்படி பல சோதனைகளை மாற்றி மாற்றி செய்துதான், bulb-ஐ எரிய விட்டார்… அனுபவ அறிவுங்கிறது, எல்லாக் காலங்களிலும், எல்லோருக்கும், எல்லாத் துறைகளிலும் தேவையான ஒன்று... சரி…, நீ அடுத்த இடைவெளி என்னன்னு சொல்லு….

மேகலா : கிருஷ்ணா…, தலைமுறை இடைவெளிங்கிறது, open-ஆப் பார்த்தால், நம்முடைய attitude-லயே வந்துருது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இடைவெளி, attitude-லயே வருதா… எப்படிச் சொல்ற…?

மேகலா : கிருஷ்ணா…, ஒரு middle class normal family-ய எடுத்துக்குவோம்… கிருஷ்ணா…, பொதுவா, சுமாரான family-யா இருந்தா.., அந்த வீட்டுல ஆண் பெண் எல்லோரும் சம்பாதிக்க இறங்கிருவாங்க. அந்த வீட்டு அம்மா, மாடு வளர்க்கும்… பெட்டிக்கடை வச்சிருப்பாங்க… சிறுக சிறுக சம்பாதிப்பதை, சிக்கனமா செலவழிப்பாங்க… அவங்க சாப்பாடு கூட, ருசியா சாப்பிடுவாங்களே தவிர, வகை வகையா சமைக்கணும்னு நினைக்க மாட்டாங்க. வீட்டில் வத்தல் காயப் போட்டிருப்பாங்க. ஒரு ரசம், துவையல், வத்தல்னு, simple சாப்பாடு… அப்பாக்கு மட்டும், egg omelette-ன்னு…, சாப்பாட்டுக்கான செலவை 5 ரூபாய்க்குள்ள முடிச்சிக்குவாங்க. பத்து ரூபாய் income இருந்தாலும், 5 ரூபாய் செலவழிச்சி, 5 ரூபாய் சேமிக்க தவறவே மாட்டாங்க. தன்னோட பிள்ளைகளை, ஆசையா வளர்க்கிறேன்னு சொல்லி, சோம்பேறியா இருக்க விட மாட்டாங்க… ஆறாங்கிளாஸ் படிக்கிற பையன் கூட, மாட்டுக்கு தீவனம் வைக்கணும், தண்ணி வைக்கணுங்கிறத சொல்லி வளப்பாங்க… ஒரு நாளும் பணத்தட்டுப்பாடுன்னு திணறுவதில்லை. அதே நேரத்துல, ஆடம்பரமாக dress பண்ணுவது, car, bike-ன்னு ஊர் சுத்துறதுங்குறது, அவர்களுக்குத் தெரியவே தெரியாது. இவர்களுடைய lifestyle-ப் பார்ப்பவர்கள் சொல்வது, ‘கட்டுச் செட்டாய் குடும்பம் நடத்துறாங்க…, அப்படீங்கிறதுதான்… இந்தத் தலைமுறை, அன்றைய தலைமுறையிலிருந்து எப்படி வேறுபடுகிறதுன்னா, எளிமை, வரவுக்குள் செலவு, உழைப்பது தெரியாமல் உழைப்பது…, என்ற வகையில் தான். இன்றைய தலைமுறையினரும், உழைக்கத்தான் செய்கிறார்கள்… மாடு வளர்த்தல், பெட்டிக்கடை, கெட்டு ஒட்டுவது இதெல்லாம் மாறி, இன்று, home baker, online marketing, boutique வைத்தல், என்று காலத்துக்குத் தகுந்த மாதிரி, வேலையும் மாறுபடுகிறது. ஆனால், எளிமைங்கிறது இப்போ காணாமல் போயிருச்சி. சமையல் செய்ய முடியலைன்னாலும், order பண்ணி, அதிலும் குறிப்பாக பிரியாணி order பண்ணுவது, swiggy service-ல் சாப்பிடுவது, common ஆகிப் போச்சு. இருக்க வீடுங்கிறது போயி, bank கொடுக்கும் loan-க்கு வீடுங்கிறது ஆகிப் போச்சு. இப்படி, அடிப்படை lifestyle-ல் பெரிய இடைவெளி வந்திருச்சி. முன்னையெல்லாம், முக்குல இருக்கும் tailor தைச்சி கொடுக்கும் சட்டை, டிரவுசர், பாவாடைன்னு கட்டுனது போயி, இன்று whatsapp-ல் design பார்த்து, order பண்ணி கட்டுவது சாதாரணமாகி விட்டது. முக்கு tailer, repair வேலை பார்க்க மட்டும் தான்…. ஆடம்பரம், order பண்ணி சாப்பிடுவது, எல்லா தரப்பு மக்களிடமும் சாதாரணமாக இருக்கிறது கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

கதை கதையாம் காரணமாம் - பாகம் 11

பேச்சுத்தமிழ் - பாகம் 5