Posts

Showing posts from October, 2026

திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 6

மேகலா : இன்னும் ஒரு குறள் சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா…. இப்படிப்பட்ட முயற்சி உடையவர்கள்; ‘இன்பம் விழையான், வினை விழைவான், தன் கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்’ இந்தக் குறள், நம் விஞ்ஞானிகள் அனைவருக்கும் பொருந்தும் கிருஷ்ணா. ஒரு லட்சியத்தை அடையும் வரைக்கும், அதில் கண்ணும் கருத்துமாக இருந்தால்தான், நம்மால் அந்த இலக்கை அடைய முடியும். லட்சியத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது, சந்தோஷமாக இருக்க ஆசைப்பட மாட்டார்கள்; தன்னுடைய வேலையில் மட்டுமே குறியாக இருப்பார்கள். இவர்கள், பல சாதனங்களை கண்டுபிடித்து, இந்த உலகத்தின் துன்பத்தைத் துடைத்து, நல்ல பலனைத் தருவார்கள்… பலர் சந்தோஷமாக இருக்க இவர்கள் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறார்கள் என்று…, ஒரு மனிதன் எப்படி முயற்சி செய்து வேலையை முடிக்க வேண்டும் என்று வள்ளுவர் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : உலகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும், ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கும், மனிதனுடைய முயற்சி மட்டுமே பிரதான காரணம்… இதற்குப் பிறகுதான் தெய்வமும் மற்ற எல்லாரும்… நல்லா யோசிச்சுப் பாரு… இயற்கையை தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் ஆதி மனிதன் இறங்காவிட்ட...