Posts

அழகு - பகுதி 5

மேகலா   : ஆம்மாம் கிருஷ்ணா….! ஆனாலும், சில இடங்களில், சில தருணங்களில் அழகின் ஆக்ரமிப்பு நம்மை, மெய் சிலிர்க்கச் செய்து விடும். இருள் விலகாத வைகறைப் பொழுதில்…., பறவைகளின் ‘கிரீச், கிரீச்’ என்ற சப்தத்தின் பின்னணியில், சூரியன் மெதுவாய், மிக மெதுவாய் தன் கதிர்களால் நம்மை வருடிக் கொடுக்கும் தருணம்…. தோட்டத்தின் இலைகள் நீர் ஊற்றாமலேயே சில்லென்று இதமாய் வீசும் காற்றில் அசைந்து கொடுக்கும்…   இந்த காலைப் பொழுதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூக்கும் சின்னப்பூ கூட, தோட்டத்தின் அழகை தூக்கிக் காட்டும்.   குளிர் காலத்துக்கென்றே ஊர்ந்து வரும் ‘ரயில் பூச்சி’ கூட, வீட்டின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்கும்…. செடிக்குச் செடி மகரந்தத்தைப் பரப்பும் பட்டாம்பூச்சி என் வீட்டையே வண்ணமயமாக்கும் அழகு…, காலையின் அழகு.   தினந்தோறும் வேலையின் பரபரப்பில் கூட என்னை வருட வைக்கும் அழகு…. கிருஷ்ணர்  : தினந்தோறும் நடக்கிற காலை நேரத்து நிகழ்ச்சி…. இதை நீ ரசிச்சி சொல்லும் போது, உன் வீடே அழகாய் இருக்கு மேகலா…. இதே போல, வெகு சாதாரணமான நிகழ்வினை அழகாய்ச் சொல்லு மேகலா…, கேட்கிறேன்…. மேகலா  : நான் எங்க க...

அழகு - பகுதி 4

மேகலா   : ஐயோ…. ஆமாம் கிருஷ்ணா… உனக்கும் பாப்பையா பிடிக்குமா கிருஷ்ணா….   ‘கருப்பு தான் அழகு, காந்தலே ருசி’  – என்ற பழமொழியை நான் சொன்னேன்ல… பாப்பையா ஐயா அவர்களை கருப்புன்னு யாராவது சொல்வாங்களா கிருஷ்ணா… அவரை நெனச்சவுடனே எனக்குத் தமிழும், தமிழின் அழகும், தெளிவும், தங்கு தடையில்லாத தகவல்களும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவரோட நகைச்சுவை கலந்த பேச்சு, இவைதானே ஞாபகத்துக்கு வரும்…, ரொம்பப் பிடிக்கவும் செய்யும்.   பட்டிமன்ற நிகழ்ச்சியே, பேச்சாளர்களின் பொடி வச்சுப் பேசுவதையும்…, ஒருவர் பேச்சுக்கு மற்றொருவர் எதிர்வாதம் செய்வதையும் கேட்பதற்குத்தானே கிருஷ்ணா…  பேச்சாளர்கள் பொடி வச்சுப் பேசும் போது, அரங்கமே அதிரும் கிருஷ்ணா…. அப்போ யாராவது, அழகுன்னா என்ன என்று கேட்டால்…, எல்லோரும் சொல்லி விடுவார்கள்… ‘வாதமும்’, ‘எதிர்வாதமும்’ காமெடியாகப் பேசப்படுமானால், அதுதான் அழகு’ என்று… கிருஷ்ணர்  :  சாதனையாளர்களுக்கு, அழகு என்பது, அவர்கள் திறமை மட்டும் தான் மேகலா… மேகலா  : ஐயோ.., கிருஷ்ணா, இன்னைக்குப் பூரா எனக்குப் பிடிச்ச மாதிரியே பேசுற கிருஷ்ணா… ‘சாதனையாளர்’, ‘திறமை’ என்...

அழகு - பகுதி 3

மேகலா   : கிருஷ்ணா…, நீ என்ன சொன்ன…. ‘அழகு’, தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் போது, மேலும் அழகாகி விடும்’ என்றாயல்லவா… ‘correct’ கிருஷ்ணா… அழகிப் போட்டியில் கலந்து கொள்பவர்கள், தங்களை எவ்வளவு அழகுபடுத்திக் கொள்கிறார்கள் தெரியுமா கிருஷ்ணா… ‘fitness’, ‘dressing’, ‘cat walking’…. சிரிப்பைக் கூட, கண்ணாடியைப் பார்த்து சிரிக்கக் கற்றுக் கொள்வது…,   தலைமுடியை சிலுப்பிக் கொள்வது என்று பார்த்துப் பார்த்துத் தயாராகித்தான் உலக அழகியாகிறார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு இத்தனை தயாராகணுமா…. நான் நெனச்சேன், கண்ணாடியைப் பார்த்து அழகாயிருப்பவர்கள், போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று… மேகலா  : நாம நினைக்கிற பேரழகிகளெல்லாம் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது கிருஷ்ணா… என்னைப் பொறுத்த வரை…,  கொஞ்சம் பூசின மாதிரி உடல்வாகு இருக்கணும்…, கணகள் நட்சத்திரமாய் மின்னணும்…. எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும்…. தலைமுடி அடர்த்தியாகவும், கொஞ்சம் சுருளாகவும், கொஞ்சம் நீளமாகவும் இருக்கணும்.  இப்படி இருந்தாலே அழகுதான்…. இங்கு அழகுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள...

அழகு - பகுதி 2

மேகலா   : நீ சொல்லும் போது தான் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது கிருஷ்ணா. குற்றாலத்தின் அழகே, அங்கு குதித்து ஓடும் அருவியும்…, நம் முகத்தில் தெறித்து வழியும் சாரலும் தானே…. அதை அனுபவிக்க ஒரு முறை தீபாவளியன்று குற்றாலம் சென்றிருந்தோம் கிருஷ்ணா. அது மழை பெய்யும் காலம். சும்மாவே குற்றாலம் ஊர் முழுவதும் சாரலால் நனைந்து காலுக்குள்ளும் ஈரம் நனைத்துக் கொண்டே இருக்கும். அன்று என்னவோ…, குற்றாலத்தின் சாரலா…, மழையின் சாரலா என்று தெரியாமல் தொடர்ந்து வானம் பொழிந்து கொண்டே இருந்தது. இந்தச் சாரலில் நனைந்து கொண்டே ஐந்தருவிக்குக் குளிக்கச் சென்றோம். எப்பவுமே ஐந்து அருவிகளாக பிரிந்து கொள்ளை அழகில் குதித்து கும்மாளமிடுமல்லவா…. அன்று…., அப்படியொரு நீர்வீழ்ச்சியை நீ பார்த்திருக்கவே மாட்டாய் கிருஷ்ணா.   புதுப்புனலாய் பொங்கி வரும் நீர்வீழ்ச்சி ஓடி வரும் வேகத்தில், செம்மண் நிலப்பரப்பையும் கலந்து இழுத்து வந்து குழம்பாக்கி செம்புலனாய் குதித்து வந்தது….   அவ்வப்போது, சிறு சிறு கற்களும் தெறித்து விழுந்தது. ஐந்தருவி ஓரருவியாய் அடர்ந்து நின்று ஆக்ரோஷமாய், பெருத்த இரைச்சலோடு ஓடி வந்தது. கீழே ந...

அழகு - பகுதி 1

கிருஷ்ணர்   : என்ன மேகலா…. உன்ன ஆளையே காணோம்…. கிராம வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது, நேரம் போவது தெரியாம பேசினோமே…. இன்னும் உனக்கு சரியான தலைப்பு கிடைக்கவில்லையா…. மேகலா  : அது ஒரு காரணம் தான் கிருஷ்ணா. இருந்தாலும், பூஜா விடுமுறைக்குப் பிறகே, ஹரி வந்ததும்…, அடுத்து தீபாவளி வந்தது…. மறுபடியும் ஹரி வந்தான்…. சஷ்டி விரதம் இருக்கக் கூட முடியவில்லை… அடுத்து இதோ, மகாதீபம் கூட முடிவடைந்து விட்டது. ரொம்ப…. நாள் gap விட்டதால், என்ன தலைப்பில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : உனக்கு ரொம்ப நல்லா எழுதக் கூடியதான தலைப்பாகச் சொல்லு…. பேசலாம்…. சரி…. இப்பவும் கேட்கிறேன், உனக்கு ரொம்பப் பிடித்தது என்று எதை நீ நினைக்கிறாய்…? மேகலா  : ‘ அழகு’ – அது எங்கெல்லாம் இருக்குதோ, அதை ரசிக்கப் பிடிக்கும்….. ரசிப்பதை எழுதுவது பிடிக்கும்…  இப்படி…. நமக்குப் பிடித்தவர்களோடு அரட்டை அடிப்பது ரொம்பப் பிடிக்கும்… கிருஷ்ணர்  : Oh! அப்படியா….. உனக்குப் பிடித்தது என்று பட்டியல் போட வேண்டாம்… ‘ அழகு’ என்ற தலைப்பில், உன் பார்வையின் அழகைப் பேசுவோம்… மேகலா ...

'வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 6 (நிறைவுப் பகுதி)

மேகலா   : ஆனாலும், அஹிம்சையின் value இப்ப செல்லுபடியாகாது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : தனி மனித வாழ்க்கையிலும் கூடவா…. மேகலா  : நிச்சயமாக கிருஷ்ணா…. இன்றைய காலகட்டத்தில், மக்களுடைய எண்ணப் போக்கு, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு’ என்பதில் கிடையாது கிருஷ்ணா…  ‘வலிமை தான் வலிமையை எதிர்கொள்ள முடியும்…..’  ’நட்பு நாடி வந்தால், குழலூதி இன்னிசை விருந்து கொடுப்போம். அதைத் தாண்டி எங்களை அசைத்துப் பார்த்தால், ’சக்ராயுதம்’ தாங்கும் கடவுளை வணங்குகிறோம்…., அந்தச் சக்ராயுதத்தை ஏவவும் செய்வோம்.  எங்களுக்கு குழலும் ஊதத் தெரியும்…., சக்ராயுதத்தையும் ஏவத் தெரியும்’.  இந்த பஞ்ச் டயலாக்கை பேசியது யார் தெரியுமா கிருஷ்ணா….  ‘வலிமையை வலிமை கொண்டு முறியடிப்போம்’ என்று சொன்னது ஏவுகணைகளின் தந்தை, நம்முடைய பெருமை மிகு டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்.  கிருஷ்ணரை, பாரதத்தின் signature symbol ஆகச் சொன்னது வேறு யாருமில்லை கிருஷ்ணா…. ‘கலியுகக் கிருஷ்ணர்’…. நம்முடைய பாரதத்தின் பிரதமர் Honorable நரேந்திர மோடி அவர்கள் தான்…. கிருஷ்ணர்  : ஓஹ...

'வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 5

மேகலா   : கிருஷ்ணா…. இன்னும் ஒரு வலிமை இருக்கிறது… மீசையை முறுக்கிக் காட்டினால் தோளைத் தட்டிக் காட்டும் வலிமை…. ஒரு கன்னத்தில் அறைந்தால், அறைந்த கையை முறுக்கி மடக்கி, அறைந்தவனையே திமிரை அடக்கச் செய்யும் வலிமை….   தீவிரவாதத்தை ஏவி விட்டு வெறியாட்டம் போட்டால்…., தீவிரவாதக் கூடாரத்தையே காலி செய்யும் ‘ஏவுகணை வலிமை’….   அஹிம்சை வலிமையை விட, இது ’பவர்ஃபுல்’ வலிமை கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : நீ சொல்லுவது நிஜம் தான் மேகலா… இதுதான் இன்றைக்குத் தேவையும் கூட… மேகலா  : இருந்தாலும், அந்நியர்களின் பிடியில் இருந்து, இந்தியாவை மீட்டெடுத்த வலிமையான ஆயுதத்தை, தன்னுடைய புன்னகையில் தாங்கி நின்றாரே…. அந்த வலிமையை நினைவு கொள்வோம் கிருஷ்ணா…..  காந்திஜியின் எளிமையைப் பார்த்து, ‘பரதேசி’ என்றவர்கள் உண்டு. அவருடைய costume-ஐப் பார்த்து, இந்தியாவே ஆண்டி மடம் தானே என்று ஏளனம் செய்தவர்களும் உண்டு…  முப்பது கோடி மக்களையும் தன் பின்னால் ஒருங்கிணைத்த மந்திரம்…. வல்லரசு நாடுகளை ஆளும் வலிமையானவர்களையும் தலை வணங்கச் செய்த மந்திரம்…. நீதிமன்றத் தீர்ப்பினால் தர்மத்தையே துலாக்கோலாகக் கையில் பிடி...