Posts

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 1

கிருஷ்ணர்   : சரி…., என்ன தலைப்பில் பேசலாம்…., ஏதாவது தீர்மானித்து வைத்திருக்கிறாயா….. மேகலா  : ஏதாவது கலகலப்பான தலைப்பு எடுக்கலாமான்னு யோசிக்கிறேன் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : யோசித்து நல்ல தலைப்பா சொல்லு மேகலா மேகலா  : கிருஷ்ணா…., இன்று ’கலாட்டா கல்யாணம்’ படம் பார்த்தேன் கிருஷ்ணா…, நாம, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்று பேசலாமா….. கிருஷ்ணர்  : ‘மீனாட்சி திருக்கல்யாணம்’ நினைவுகளோடு, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்று பேசப் போகிறோமா….. O.K…. Super…. Super…. ஆமாம்…., உனக்கு இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்று ஏன் தோணுச்சி மேகலா….? மேகலா  : கிருஷ்ணா….. முதலில் உனக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன் கிருஷ்ணா…. ‘மீனாட்சி திருக்கல்யாண’ நிகழ்ச்சி நடந்ததைப் பற்றி உன்னிடம் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்ததை எனக்கு நினைவுபடுத்தி, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்ற தலைப்பையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறாய் என்று ஞாபகப்படுத்தி இருக்கிறாய்…. அதுவே, நீ என்னை வாழ்த்தியதாக உணர்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…., சிறப்பாக ஆரம்பித்திருக்கிறாய்…. ஏன் மேகலா…., ‘கல்யாணம்’… இத...

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 7 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : இல்லாமல் இருக்குமா….? பிள்ளைகளுக்கு கதை சொல்லும் போது, தொழில்துறையில் சாதனையாளர்களான அம்பானி, டாடா நிறுவனர், Infosys நாராயணமூர்த்தி போன்ற சாதனையாளர்களின் வளர்ச்சியைப் பற்றி சொல்லிப் பாரு…. அவர்களுடைய இப்போதைய வளர்ச்சியைப் பற்றி நீ சொல்லும் போது, பிள்ளைகளுக்கும், தானும் ஒரு நாள், அவர்கள் போல வர வேண்டும் என்ற கனவு கண்களில் தெரியும்….. மேகலா  : நெசம் தான் கிருஷ்ணா…. ஒவ்வொரு சின்னப் பிள்ளைக்கும், ‘அம்பானி’, ‘டாடா’, ‘Infosys’ போன்ற பிரம்மாண்டத்தின் மீது ஒரு பிரமிப்பு கட்டாயம் வரும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ‘Right’…. அந்த மாதிரி சமயங்களில், அம்பானி ஆரம்ப கட்டத்தில் எவ்வளவு சாதாரணமாக இருந்தார்; மும்பை road side கடைகளில், காத்திருந்து ‘புலாவ்’ சாப்பிட்ட சாதாரண ஆள், தன் உழைப்பினால் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்று அழுத்தமாகச் சொல்லிப் பாரு….. அப்போ, அந்தக் குழந்தை நம்பிக்கையோடு கேட்கும்…. ‘நாமும் நன்றாக படித்து வேலை செய்தால், அம்பானி மாதிரி வரலாமா…..’ என்று. அது மட்டுமல்ல, இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தின் M. D. Infosys நாராயணமூர்த்தி ஒரு சின்ன apartment...

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 6

மேகலா  : பிள்ளைகள் போக்கிலேயே சென்று திசை திருப்பணும்னா, எப்படி கிருஷ்ணா…. ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம்….. பிள்ளைகள், இன்னைக்கு home work இல்லைன்னு பொய் சொல்லி, விளையாடப் போறாங்கன்னு வச்சுக்குவோம்…. அப்போ, அவங்க போக்கிலேயே எப்படிப் போறது….. கிருஷ்ணர்  : இதப் பாரு மேகலா…. நீ என்ன சின்னப் பிள்ளையா…. ‘home work’ கிடையாதுன்னு பொய் சொன்னா என்ன செய்யிறதுன்னு கேட்பதற்கு…. அம்மா, diary-யைச் check பண்ணுவாங்க, friend கிட்ட phone பண்ணிக் கேப்பாங்கன்னு தெரிஞ்சும் டிமிக்கி குடுக்குற பிள்ளைகளின் முதுகில் ரெண்டு போடு போடத்தான் செய்யணும்.  நித்திய கடமையைச் செய்யாமல் விட்டா, அம்மா முதுகுல சாத்துவாங்க என்ற பயம் பிள்ளைகளை கடமையை ஒழுங்காகச் செய்ய வைக்கும்.  எந்தக் காலத்திலும்,  தண்டனை ஒன்றுதான் மனிதனை தன் கடமையை ஒழுங்காகச் செய்ய வைக்கும். மேகலா  : பின்னே எதுல, பிள்ளைகளைத் திசை திருப்புவது…? கிருஷ்ணர்  : சரி…… home work எழுதும் பிரச்னையையே எடுத்துக்குவோம்…. இன்று home work இல்லை என்றதும்…., நீயும், ‘சரி’ என்று check பண்ணாமல் விட்டால் என்னாகும்… அப்படியே, மறு நாள் பி...

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 5

கிருஷ்ணர்   : அப்படீன்னு யார் சொன்னது? பிள்ளைகள் சேட்டை பண்ணும் பொது ரெண்டு மொத்து கூட மொத்தலாம். இதையெல்லாம் அம்மாவாகச் செய்ய வேண்டும்.   பிள்ளைகளுக்கு அம்மாவோட ஸ்பரிசம் எவ்வளவு இதமானதோ…., அனுசரணையானதோ, அது போல, அம்மாவோட கண்டிப்பும், அடியும் கூட இயல்பானதுதான்.   ஏத்துக் கொள்ளும்….. அம்மா சாப்பாடு போடுவது மாதிரிதான்…., முதுகில் மொத்துவதும்…. இதை வைத்து, உரிமை…., சுதந்திரம் என்று தேவையில்லாததை யோசித்து complicate ஆகாதே. உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா… பிள்ளைகள் பொதுவாக, normal-ஆ பெற்றோர்கள் இருந்தார்கள் என்றால், அவர்களே நீ விதிக்கும் கட்டுப்பாட்டுக்குள் கூட கொஞ்சம் சலிப்பாக வருவார்கள்….. ஆனால்,   உன்னுடைய கனவை, உன் ஆசையை…., உன் இயலாமையை அவர்கள் மீது திணிக்கும் போது, திமிறி விடுவார்கள்….. ஜாக்கிரதை…. மேகலா  : அப்போ, பிள்ளைகளைப் பற்றி நமக்கென்று ஒரு கனவு இருக்கவே கூடாதா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : மேகலா….,  கீதையில், கடமையைச் செய்…, பலனை எதிர்பாராதே… என்ற வாசகத்தின் அர்த்தம் உனக்குத் தெரியுமா……  குழந்தையை வளர்க்க வேண்டிய கடமை உன்னிடம் உள்ளது. மூன்று வயது வர...

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 4

கிருஷ்ணர்   : என்ன திடீரென்று உரிமையைப் பற்றிப் பேசுகிறாய்? நீ அம்மா;   உன் பிள்ளையை வளர்க்கும் கடமை உன்னைச் சார்ந்தது என்ற பொறுப்பு உன் நினைவில் இருந்தால், உரிமையைப் பற்றி ஏன் யோசிக்கணும்…..   ஆடுற மாட்டை, ஆடிக் கறக்கணும் என்ற பழமொழியை யோசித்தாயா…. மாட்டின் மடியில் பால் கறக்க நினைப்பவன், மாட்டுக்குச் சொந்தமான கன்றினை தன் நாவால் நக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். கன்னுக்குட்டி பால் குடிக்க அனுமதிக்கணும். மாட்டினை தொழுவத்தில் கட்டி வைத்த கயிற்றை தன் கையில் வைத்துக் கொண்டு, பசு மாட்டின் தாடையைத் தடவிக் கொடுத்து, தாஜா பண்ணி, பால் கறப்பதில்லையா…. பசு மாடு, தனதென்று உரிமை பாராட்டி கன்றுக்குட்டியை அவிழ்த்து விடாமல், பால் குடிக்க விடாமல் செய்தால், பசு மாட்டிடம் பால் கறக்க முடியுமா….? மேகலா….,   நம்முடைய உரிமையை நாம் செயல்படுத்துவதற்குக் கூட, பக்குவம் தேவைப்படுகிறது; பொறுமை தேவைப்படுகிறது.   நன்றாக நினைவில் வைத்துக் கொள்…., கயிறு உன் கையில் இருக்கிறது. பால் கறப்பதும், கறக்க முடியாமல் போவதும், உன் சாமர்த்தியம். உரிமை, சுதந்திரம் என்று சொல்லி, பிள்ளைகளின் மனதில் வேறுபாட்டை வ...

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 3

மேகலா   : கிருஷ்ணா….   ‘நான், நானாக இருக்க வேண்டும்’ என்றால், என்ன கிருஷ்ணா….? கிருஷ்ணர்  :  ’எனக்குப் பிடித்த வேலையைச் செய்து, பிடித்த ஆடையை அணிந்து, பிடித்ததைச் சாப்பிட்டு, சுதந்திரமாக இருப்பேன்….’  என்பது தானே…. மேகலா  : இப்படி நெனக்கிறவங்க, ரொம்ப conscious ஆக,  யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்; என் மனசு என்ன சொல்லுதோ, அத மட்டும் தான் கேட்பேன்  என்று சொல்றவங்களாத்தானே இருக்காங்க…..  அப்போ, ‘அனுசரணை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்……  பெரியவங்க சொல்றத கேட்கணும் என்பதற்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது….  ‘நான், நானாக இருப்பேன் என்பவர்கள்…., பிடிவாதம் பிடித்தவங்களாத்தானே இருக்கிறாங்க….  ஏன் கிருஷ்ணா, ஒரு அம்மா, அல்லது அப்பா…. அவங்களுக்கு, அவங்களோட பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், எதிர்காலம் இதிலெல்லாம் அக்கறை இருக்காதா…., அல்லது இருக்கக் கூடாதா…..  பிள்ளைகளின் மீதான அக்கறையை, ஏன் ‘தலையீடு’ என்று சொல்லணும்….. கிருஷ்ணர்  : நீ ஏன், பெற்றவர்களின் அக்கறையை மதிப்பதில்லை என்று பார்க்கிறாய்….?  தங்கள் தனித்தன்மையை புரிந்து கொள...

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 2

மேகலா   : கிருஷ்ணா…… பொண்ணோட பெயர் ‘ஜனனி’. அவளோட மாமா மகள் தான் யோசிக்க வைக்கும் வசனம் பேசினாள். அவளுக்கு ஆரம்பம் முதலே, ஜனனி, அப்பா சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவது பிடிக்காது. ஆனால், கல்யாணம் வரைக்கும், அவளோட அப்பாவே முடிவெடுத்து விடுகிறார். அதனால், at least தனிப்பட்ட முறையில் மாப்பிள்ளையைப் பார்த்து, அவன் ஜனனிக்குப் பொருத்தமாய் இருப்பானா என்று முடிவு செய்யலாம் என்று வற்புறுத்தி, ஜனனியையும் கூட்டிக் கொண்டு, friends-உடன் மதுரை வந்து விடுகிறார்கள். வந்த இடத்தில், மாப்பிள்ளை ரொம்ப plain-ஆக, தான் +2 தான் படித்திருப்பதாகவும், தன் படிப்புக்கு ஏற்றவாறு, ‘குவாரி’ வேலையைக் கவனித்துக் கொள்வதாகவும் சொல்கிறான். ’எந்த வேலையாய் இருந்தால் என்ன, இதுவும் நம்ம வேலைதானே’ என்கிறான்.   அவன் அப்படி வெளிப்படையாகப் பேசியது, அவர்களுக்குப் பிடித்துப் போய் விட, கல்யாணத்திற்கு முழு சம்மதமும் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகுதான், கல்யாண ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது. கல்யாண வீட்டில் வைத்துத்தான், மாப்பிள்ளை வீட்டாரின் அலப்பறையில், ஜனனியின் மாமா பொண்ணு கேட்கிறாள்,  ‘என்ன ஜனனி இதெல்லாம்…., நீ இதுக்கா படிச்ச…....