திருக்குறளில் வாழ்வியல் - பாகம்4
மேகலா : எனக்கு மகாபாரதத்தில் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது கிருஷ்ணா…. அர்ஜுனனை, பரமசிவனாரிடமிருந்து, பாசுபதா அஸ்திரத்தை வரமாகப் பெற்று வா என்று கிருஷ்ணர் பணிக்கிறார். பரமசிவனாரிடமிருந்து ஒரு அஸ்திரத்தைப் பெற வேண்டும் என்பது சாதாரண task இல்லை…. செயற்கரிய இந்தச் செயலைச் செய்வதற்கு அர்ஜுனன் காட்டிற்குச் சென்று தவம் செய்யப் புறப்படுகிறான்…. மனசார பரமசிவனாரை வேண்டி, நமச்சிவாய மந்திரத்தை ஓதுகிறான். அந்தச் சமயத்தில் மனசு கண்டபடி அலை மோதினால், எப்படி இறையனாரின் காதில் நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். தன் ஆசைகளை…, கோபத்தைக் கட்டுப்படுத்தி, நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்கிறான். வீரத்தில் சிறந்த அர்ஜுனனின் தவத்தை மெச்சி, பரமசிவனார், வேட்டுவராக இறங்கி வந்து, அர்ஜுனனின் கவனத்தை திசை திருப்ப, காட்டுப்பன்றியை அனுப்புகிறார். தவம் கலைந்த அர்ஜுனன், பன்றியை விரட்ட அம்பெய்துகிறான்… வேட்டுவனான பரமசிவனாரும், பன்றியை நோக்கி அம்பை விட, இருவருக்கும் மோதல் வரும்படி ஒரு நாடகம் நடத்துகிறார். இருவரும், பன்றி தனக்கானது என்று சொல்ல, மற்போர் புரிகின்றனர். சந்தடி சாக்கில், இறையனார், அர்ஜுனனின் தோள்களைக் கட்டிப் பிடிக்கிறார். மெய் சிலிர்த்துப் போன அர்ஜுனனுக்கு, பரமசிவனாராய்க் காட்சி தந்து, யாருமே பெற முடியாத அஸ்திரமான பாசுபதா அஸ்திரத்தை ஏவும் முறையைக் கற்றுக் கொடுத்து…, போரில் வெற்றி பெறும் திறமையை வலுப்படுத்துகிறார் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : மனசைக் கட்டுப்படுத்தி, ஒரு செயலில் இறங்கும் போது, கடவுளே இறங்கி வருவார் என்பது சத்தியமான உண்மை… சரி…, மனதை அலைய விடாமல் கட்டுப்படுத்தி, நல்லதை நினைக்கவும், நடத்தவும் தெரிந்த வலிமையாளன், எவ்வாறு செயல்களைச் செய்ய வேண்டும்….?
மேகலா : கிருஷ்ணா…, இதற்கு வள்ளுவர் நிறைய குறள்களைச் சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா… எந்தச் செயலைச் செய்வதற்கு முன்னால்…, அந்தச் செயலைச் செய்யலாமா…, எப்ப செய்யிறது…, எப்படிச் செய்யிறது…, ஏன் செய்யணும்…, செஞ்சா அதனால நன்மை கிடைக்குமா என்றெல்லாம்…, முதலில் நல்லா யோசனை செய்து காரியத்தில் இறங்கணும்… காரியத்தில் இறங்கிய பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசால்ட்டா இருந்தா…, அதுவே துன்பம் வருவதற்கு காரணமாகக் கூடப் போயிரலாம்…
‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு’
கிருஷ்ணர் : வள்ளுவர், ‘பஞ்ச் டயலாக்’ மாதிரி குறளைச் சொல்லுகிறார்.
மேகலா : கிருஷ்ணா…, ஒரு செயலுக்கு திட்டமிடுதல் எவ்வளவு முக்கியம்… அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், எப்பேர்ப்பட்டவர்களுக்கும், அடி சறுக்கி விடும்... இதை இன்னும் தெளிவாக,
‘அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்’
கிட்டத்தட்ட இதுவும் திட்டமிடுதல்தான். ஆனாலும், இது செயலைச் செய்யத் தயாரான பின் செய்ய வேண்டிய செயல்…, ஒரு செயலைச் செய்தால் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து, அதனால் கிடைக்கும் பலன்களை உத்தேசித்து, செயலைச் செய்ய வேண்டும் என்கிறார்…. இதற்கு இப்பொழுது நடைமுறையில் செய்யப்பட்ட ஒரு செயலைச் சொல்லுகிறேன் கிருஷ்ணா… அரசாங்கம் இந்திய மக்களுக்கு, ‘ஆதார் கார்டு’ வழங்கிய செயல் உனக்கு ஞாபகம் இருக்கிறதா கிருஷ்ணா… மக்களுக்கு ‘ஆதார் கார்டு’ உடைய முக்கியத்துவம் புரியவில்லை. State Government-ம் இது அநாவசியம் என்றுதான் நினைத்தது… Ration Card இருக்கே. இதை விட ஆதார் கார்டு என்ன செய்யப் போகிறது என்று நினைத்தார்கள். இதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து, மத்திய அரசாங்கம், ஆதார் கார்டை கட்டாயப்படுத்தியது. எல்லாத் துறைகளிலும், ஆதார் கார்டை இணைத்து, கிட்டத்தட்ட Identity Card மாதிரி கட்டாயப்படுத்தினார்கள். அதைப் பெறுவதற்கு மக்கள் திணறினார்கள்… இப்பத்தான் புரியுது கிருஷ்ணா… அரசாங்கத்தின் எந்த உதவியும், நேரிடையாக மக்களைச் சென்றடைவதற்கான பாலம் தான் இந்த ‘ஆதார் கார்டு’… Bank Account-டோடு, Card No., இணைக்கப்பட்டது. இதனால், எந்த மந்திரியும், அதிகாரியும், குறுக்கே புகுந்து, மத்திய அரசாங்க உதவிகளை ஆட்டையப் போட முடியாது… அது மாதிரிதான் Google Pay…, PhonePe என்ற பணப் பரிமாற்றம்… அறிமுகமாகும் போது, மக்கள் பயந்தார்கள்… இன்று, காய்கறிக்கடை, roadside வியாபாரிகள் கூட, safe ஆக, PhonePe operation-ஐ வெற்றிகரமாக நடத்துகிறார்கள். கையில் நிறையப் பணம் கொண்டு போகும் அச்சம் தேவையில்லை. இல்லையா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : வள்ளுவர் எண்ணப்படி உலகம் இயங்குகிறதா…, இல்லை உலக இயக்கத்திற்குத் தகுந்த மாதிரி குறள் எழுதியிருக்கிறாரா…?
மேகலா : எனக்கென்னவோ ஒரு doubt வருது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அதுக்குள்ள என்ன சந்தேகம்…?
(தொடரும்)
Comments
Post a Comment