திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 5

மேகலா : எனக்கென்னவோ ஒரு doubt வருது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அதுக்குள்ள என்ன சந்தேகம்….?

மேகலா : நீதான், யாரிடமும் சொல்லாமல்…, சத்தங்காட்டாமல் வள்ளுவராக அவதாரம் எடுத்து குறளை எழுதிருக்கிறாயோ… ஒவ்வொரு குறளும் கடவுளின் சத்திய வாக்காகத்தான் தெரிகிறது…

கிருஷ்ணர் : ஓ…! அதைச் சொல்லுறயா… உண்மையை யார் சொன்னாலும், அது கடவுள் வாக்காகத்தான் இருக்கும்…. நல்ல மனுஷங்க எல்லோருமே கடவுளின் அம்சமே... சரி…, நன்மை தீமைகளை ஆராய்ந்து செயலைச் செய்யும் வல்லவன்… அவனைப்பற்றி ஒரு description சொல்லுவாரே…, எங்க சொல்லு பார்க்கலாம்….

மேகலா :

‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது’

கிருஷ்ணர் : வாவ்! என்ன தெளிவாய் யோசிக்கிறார் பாரு… ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லத் தெரிந்தவன், எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும், அத்தனை முறையும் விளக்கிச் சொல்லத் தயங்க மாட்டான். எரிச்சலேயடையாமல், சோர்வடையாமல், தன் கருத்தை விளக்கிச் சொல்வான்… அதனால் சபையோருக்குப் பிடிக்காதோ…, நம்மை அவமானப்படுத்துவார்களோ…, எதிர்வினையாற்றுவார்களோ…, என்று எதற்கும் பயப்படவே மாட்டான்… அவனை ஜெயிப்பதற்கு இன்னும் ஒருவன் பிறந்துதான் வரணும்… அத்தனைக்கு தெளிவான சிந்தனையாளன். இப்படி ஒருவனை நீ பார்த்திருக்கிறயா….

மேகலா : பார்த்திருக்கிறாயா என்று விளையாட்டாத்தான கேட்கிற கிருஷ்ணா…. உனக்குத்தான் தெரியுமே… ‘கர்நாடக சிங்கம்’ என்று பெயரெடுத்த ஒரு I. P. S. Officer… பிறப்பால், விவசாயி… கொள்கையால், தேசியவாதி…, பாரத தேசத்தின் இடமும், வலமும், மேலும், கீழும் எந்தத் திசையிலும் நடந்த…, நடந்து கொண்டிருக்கிற எல்லா வரலாறுகளையும் நன்கறிந்து ஆராய்ந்து தெளிந்தவர்… ஆன்மீக பலம் கொண்டவர். தன் மனசுக்கு தப்பு என்று தோன்றினால், அதை எடுத்துச் சொல்லத் தயங்காதவர்…. குற்றம் செய்தவரைத் தோலுரிக்கத் தயங்காதவர்…. தப்பு நடக்க விடாமல் என்ன செய்யணுமோ, அதைச் செய்வதில் உறுதியானவர்…. அண்ணாமலை I. P. S. கிருஷ்ணா….

‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்குமரிது’

கிருஷ்ணர் : உண்மைதான்… வள்ளுவர் நெய்த குறள் என்னும் தலைப்பாகை அண்ணாமலைக்கே பொருந்தும்…

மேகலா : வாவ்! கிருஷ்ணா…, உன் வாயாலேயே, அண்ணாமலைக்கு கிரீடம் வைத்து விட்டாய் கிருஷ்ணா…. வாழ்வியல் குறளில் நன்முத்து இந்தக் குறள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Definitely… எந்தக் குறளைத்தான் வள்ளுவர் குறைச்சலா எழுதியிருக்காரு. தர்மதேவதை திருக்குறளைத்தானே வேதமாக தன் கையில் வைத்திருக்கிறாள். 1330 குறளும், வைர வைடூரியங்களே. அதில் இதுவும் ஒன்று… யாருக்கும் பயப்படாதவன்… எந்த விஷயத்தையும் சபையில், எத்தனை முறையென்றாலும், அலுப்பின்றி எடுத்துச் சொல்லத் தெரிந்தவன். இவனுடைய முற்சி எப்படிப்பட்டதாக இருக்கும்….

மேகலா : இந்த முயற்சியையே, ரொம்பப் பெருமையாக வள்ளுவர் சொல்கிறார் கிருஷ்ணா… தெய்வத்தால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் கூட, நீ எடுக்கும் முயற்சி, உன்னைக் காப்பாற்றும் என்று சொல்றாருல்ல. அந்த முயற்சியை எப்படி எடுக்க வேண்டும் என்கிறார்… பொதுவாக, மனிதர்கள்…, ஒரு வேலையைச் செய்ய முனையும் போது, அது தடைப்பட்டால், மனம் தளர்ந்து போய், கை விட்டு விடுவார்கள்…

‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்’

இந்தச் செயலை நம்மால் செய்ய முடியாது…, செய்வதற்கு அரியது என்று நினையாமல், ‘அசாவாமை’ வேண்டும்… சோர்வே அடையக் கூடாது… திரும்பத் திரும்ப முயற்சி செய்தால், அது நமக்கு மிகப் பெரிய பெருமையைத் தரும் என்கிறார் கிருஷ்ணா… நம்ம நாட்டுல, நம்ம விஞ்ஞானிகளால் உருவாக்கப்படும் ஏவுகணைகளை தயாரிப்பதற்கு, பாரதம் முதலில் தயங்கியது. அப்போ இருந்த பாரதப் பிரதமர், மேதகு இந்திரா காந்தி அம்மையார்…, அன்றைய விஞ்ஞானியான அப்துல் கலாம் அவர்களை அழைத்து, நம்ம நாட்டு சொந்த தயாரிப்புகளை வைத்தே, ஏவுகலம் தயாரிக்க முடியுமா என்று கேட்டதற்கு, அதைச் சவாலுடம் ஏற்றுக் கொண்ட விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள்… பல தடங்கல்களுக்கிடையே, அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்…. நம்மால் முடியாது என்ற பல செயல்கள், மனித முயற்சியால் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது… அதற்கு முயற்சிப்பவர்களுக்கு, ‘அசாவானம்’, அதாவது ‘சோர்வடையாமை’ வேண்டும்… 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல விஞ்ஞான சாதனங்கள், சோர்வடையாத பலரின் முயற்சிதான் காரணம்…, இல்லையா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Sure…, sure….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

பக்குவம் - பாகம் 8