வாகனங்கள் பலவிதம் - பகுதி 8
கிருஷ்ணர் : நாங்கள் Niagara Falls இருக்கும் Buffalo நகருக்கு train-ல் சென்ற அனுபவம் பற்றிக் கேட்டாயல்லவா? நாங்கள் train-ல் போன அந்தப் பயணமே ரொம்ப சுவாரஸ்யமானது…… இங்கெல்லாம் train-ல் seat No.-லாம் தருகிறார்கள் அல்லவா…. ஆனால், நாங்கள் சென்ற train-ல் seat No.-லாம் கிடையாது… மேகலா : Oh! Unreserved-ஆ….? கிருஷ்ணர் : என்ன…, unreserved-ஆ என்று அசால்ட்டா கேக்குற… நாங்க railway station-க்குப் போனோம்ல… எங்கள் ticket-ஐக் காண்பித்து, luggage எல்லாவற்றையும் check பண்ணி, train-ல் ஏற்றி விட்டார்கள்.. மேகலா : கையோடு நீங்கள் எடுத்துச் செல்லவில்லையா….? கிருஷ்ணர் : No…… Flight-ல் முதலில் luggage-ல் tag கட்டி, எடுத்துச் செல்வார்கள்-ல, அது மாதிரி இங்கயும், station-ல் வைத்தே luggage-ல் tag கட்டி கொண்டு செல்லப்பட்டது. பரபரப்பான அந்த station-ல் எங்கள் train-க்கான waiting room-ல் நாங்கள் காத்திருந்தோம். அப்போ, ஒரு lady, ‘T.T.R’ மாதிரி, அங்கு வந்து, எங்களுக்கான ‘boarding pass’-ஐ, announce பண்ணினார்கள். மேகலா : Boarding pass-ஐ, announce பண்ணினார்களா…..? கிருஷ்ணர் ...