நீங்க..., நல்லவரா..., கெட்டவரா....? - பகுதி 4
கிருஷ்ணர் : மேகலா…. அரசியல்வாதியாகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இன்னும் ஒரு நல்லவரை, சுதந்திரப் போராட்டத் தியாகியைப் பற்றிப் பேசலாம் மேகலா…. மேகலா : நாம் இதுவரை இவரைப் பற்றிப் பேசியது மட்டுமில்லை கிருஷ்ணா…, யோசித்தது கூட இல்லை கிருஷ்ணா…. இவரைப் பற்றி எனக்கு முழுவதுமாகத் தெரியாவிட்டாலும், இவர் செய்த ஒரு காரியம், நிச்சயம் இவர் நல்லவர் தான் என்று நமக்குச் சொல்லி விடும். கிருஷ்ணர் : ‘ஒரு காரியமா….’? ‘நல்லவர்’ என்று சொல்லுமா? யார் அவர்….? மேகலா : சர்தார்….. கிருஷ்ணர் : வல்லபாய் பட்டேல்…. நான் தான் முதலில் சொன்னேன்… மேகலா : யார் வேண்டுமானாலும் சொல்லலாம் கிருஷ்ணா! என்னைக் கேட்டால், எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்ல வேண்டும்….. ‘சர்தார் வல்லபாய் பட்டேல்’ ஒரு வல்லவர், திறமைசாலிஎன்று… கிருஷ்ணர் : சரி…. விளக்கமாகச் சொல்லு மேகலா…. மேகலா : கிருஷ்ணா! நம்முடைய பாரத நாடு, பல மாநிலங்களாக, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒருங்கிணைக்கப்பட்ட பாரத தேசமாக விரிவு படுத்தப்பட்டு பெருமையாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமே, சர்தார் வல்லபாய் பட...