Posts

பெண்களால் முடியும் - பாகம் 6

மேகலா   : கிருஷ்ணா…., பவானி ஆற்றங்கரையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருப்பவர் கிருஷ்ணா…. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்த பாப்பம்மாள். விவசாயத்தின் மீது கொண்ட நம்பிக்கையில், முதலில் 4 ஏக்கர் நிலம் வாங்கி, ‘இயற்கை முறை’யில் (organic) விவசாயம் பார்க்க ஆரம்பித்தார்… அது, இன்று 10 ஏக்கராக பெருகியிருக்கிறது… பிறருக்கு ஆரோக்கிய உணவு கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விவசாயம் பார்ப்பதை அறிந்த சமூக ஆர்வலர்கள், அவரை பெருமையுடன் கொண்டாடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற மத்திய அரசாங்கம்…, இன்று, பாரதத்தின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  :  விருதுக்கு ஆண், பெண் பேதம் கிடையாது.  ஆனாலும்…, பாப்பம்மாளுக்கு விருது வழங்கியதில், விருது, நிமிர்ந்து, உயர்ந்து நிற்கிறது மேகலா…. வாவ்…. பெண்களால் முடியும்…. மேகலா  : கிருஷ்ணா…., விருது வழங்கப்பட்ட பெண்ணைத்தானே இப்போ பார்த்தோம். பிரதமந்திரியே ஒரு பெண்ணின் காலில் விழுந்த சம்பவம் நினைவிருக்கிறதா கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : மறக்க முடியுமா மேகலா… ‘சின்னப்புள்ள’… இவரும்...

பெண்களால் முடியும் - பாகம் 5

மேகலா  : கிருஷ்ணா…., நீ தாய்மை குணம் கொண்ட பெண்கள் என்று சொன்னது, ஔவைக்கு மிகச் சரியாகப் பொருந்தும் கிருஷ்ணா… அந்தக் காலங்களில், குறுநில மன்னர்களிடையே போர் நடந்து கொண்டே இருக்கும் போல… அப்படியொரு சூழலில், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி, தனக்குப் பிறந்த இரு பெண் பிள்ளைகளைப் பரிதவிக்க விட்டு மாண்டு போனான். பாரியின் வள்ளல்தன்மை, சங்க நூல்களில் பிரசித்தமான வரலாறு. அவனுடைய பெண்பிள்ளைகள், அரவணைக்க யாருமின்றி தவிப்பதைக் கேள்வியுற்ற ஔவைப்பிராட்டி, பாரியின் பரம்பு நாட்டிற்குச் சென்று, அவருடைய மகள்களைத் தன் மகள்களாகப் பாவித்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : ஏய்…, இது super தகவலாக இருக்கிறதே… நாம், ராமாயண காலத்திலேயே பார்த்திருக்கிறோமே… விசுவாமித்திரர், தானாக முடிவெடுத்து, ராமருக்கு, ஜனகரின் மகளாகிய ஜானகிக்கு மணமுடித்து வைத்த நாடல்லவா…, நம்முடைய பாரத நாடு… இங்கு குருவாக இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகம்…  இதில் ஆண் என்ன, பெண் என்ன.. ஔவையால்…., ஏன்…, பெண்களால் முடியும் மேகலா…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா… நீ சொன்ன பிறகுதான் தெரியுது…. விசுவாமித்திரரு...

பெண்களால் முடியும் - பாகம் 4

மேகலா   : கிருஷ்ணா…, ‘தகடூர்’ அதியமான், அரசனாகப் பொறுப்பேற்று ஆண்ட ஒரு குறுநிலநாடு என்று சொல்லலாம். இப்போ இருக்கும், ‘தர்மபுரி’யும் அதைச் சுற்றியுள்ள நகரமும்…., இப்பவும் பச்சைப் பசேலென்று செழித்து நிற்கும் பூமிதான் ‘தகடூர்’… அதியமான், கற்றவர்களை மிகவும் மதிப்பவன்…. அவர்கள் நாட்டிற்கு, ஔவையார் வருகை புரிந்திருந்தார். ஔவையாரின், ‘நன்னெறி’, ‘மூதுரை’…, போன்ற இலக்கியங்களை வாசித்திருந்த அதியமான், அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, தங்கள் நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு வேண்டிக் கொண்டான்… ஔவையாரும், மன்னனின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, அங்கேயே சில காலம் தங்கி விட்டார். ஒரு முறை அதியமான், ஔவையாரை, தன் நாட்டின் செழிப்பான பகுதிகளைக் காண அழைத்துச் சென்றான். அப்போ, ஒரு காயலான் கடையில், முனை மழுங்கிய வாள், இரண்டாக உடைந்த வேல்…, என்று போர்க்கருவிகள் குவிந்து கிடந்தன. ஔவையாருக்கு ஒரே மனக்குழப்பம்… மண்வளம் செழிப்பாக இருக்கும் இந்த விவசாய பூமியில், படைக்கருவிகள் ஏன் இத்தனை குவிந்து கிடக்கின்றன…, என்ற வேதனை, அவர் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தன…. இதனை குறிப்பாகப் புரிந்து கொண்ட அதியமான்…, ...

பெண்களால் முடியும் - பாகம் 3

மேகலா   : கிருஷ்ணா…., நிறுவனங்கள் அடையாளம் காட்டும் பெண்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை கிருஷ்ணா… நல்ல மனமுடையவர்களைக் கூட, அடையாளம் காட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…. நல்ல மனமுடைய யாரை, எந்த நிறுவனம் அடையாளம் காட்டியிருக்கிறது…. மேகலா  : ISKCON மாதிரி வழிபாடு செய்யும் இடங்களில், தினந்தோறும் மக்களுக்கு பசி தீர்ப்பதற்காக அன்னதானம் போடுகிறார்கள். சிலர், ஆத்மதிருப்திக்காக, குறைந்த விலையில் சாப்பாடு கொடுப்பதுண்டு… இதெல்லாம் சிலர் குழுவாகச் சேர்ந்து செய்கிறார்கள்… செய்ய முடியும்…. ஆனால், ஒரு பெண், இப்போ அவங்களுக்கு, 60, 65 வயது இருக்கும். அவர்கள் பசித்து வருபவர்களுக்கு, சும்மா கொடுப்பது போல, 1 ரூபாய்க்கு இட்லி, சட்னி வைத்து கொடுக்கிறார்கள் கிருஷ்ணா… அதிலும், யாருடைய உதவியும் இல்லாமல், அந்த இட்லி விற்கும் காசை வைத்தே, பசித்து வருபவர்களுக்கு, அன்னபூரணியாக, 1 ரூபாய்க்கு இட்லி விற்கிறார்கள். ‘கொரோனா’ காலத்தில் கூட, அவர் தன்னுடைய பணியை விடவில்லை. இதைக் கேள்விப்பட்ட ‘மஹிந்திரா க்ரூப்’ M. D., ஆச்சர்யப்பட்டு, அந்த அம்மாவை நேரில் சந்தித்து, அவர்களுக...

பெண்களால் முடியும் - பாகம் 2

மேகலா   : கிருஷ்ணா…., பாரதியாரின் கவிதையைச் சொல்லிட்டயா… எனக்கு, விண்ணிலே பறக்கும் பெண்கள் ஞாபகம் வருது கிருஷ்ணா… ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் வரைக்கும் பெண்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பதை நாம் பார்த்து விட்டோம்ல…. Space-ல் பறந்த பெண்ணை, சில காலத்திற்கு முன்னால் எல்லோரும் பார்த்தோமே…, நினைவிருக்கிறதா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : OH! ஆமாம்… ‘நாசா’ அனுப்பிய விண்கலத்தில், space-க்குப் பறந்து சென்றவர்களில் ஒருவர் தான் ‘கல்பனா சாவ்லா’. விண்ணில் பறந்தவர்… விண் வெளியிலேயே காற்றோடு கரைந்து போனவள்…  இப்படிப் பேசப் பேசத்தான், ‘பெண்களால் முடியும்’ என்ற வார்த்தையை, பெருமையாய் சொல்ல முடிகிறது….. மேகலா  : கிருஷ்ணா…, ‘கல்பனா சாவ்லா’ ஒருவர் தான்…. இன்று, அவர் காற்றோடு கலந்து…, நூற்றுக்கும் மேலான கல்பனா சாவ்லாக்களை, விண்வெளியில் தூவி விட்டார் போலும்… ஆகாய விமானத்தை ஓட்டும் விமானிகளில் எத்தனை பேர் பெண்கள் தெரியுமா கிருஷ்ணா…. நான் முதன் முதலில் துபாய்க்குச் செல்லும் போது, அந்த விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவர், பெண்… இப்போ, ஹரித்துவார் சென்ற போது…, அங்கிருந்து Bangalore-க்குத் திரும்ப...

பெண்களால் முடியும் - பாகம் 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…., புத்தம் புது தலைப்புடன் நானும் வந்திட்டேன்… என்ன தலைப்பு என்று சொல் பார்க்கலாம்… கிருஷ்ணர்  : தலைப்பு நான் சொல்லணும் என்று இங்கு வந்தேன். நீ ஏற்கனவே decide பண்ணிட்டயா…. சரி, என்ன தலைப்பு….? மேகலா  : கிருஷ்ணா! நீ என்ன தலைப்பை select பண்ணியிருக்கிறாய்…., அதச் சொல்லு முதலில்…. நான் பிறகு சொல்கிறேன்… கிருஷ்ணர்  : ‘பெண்களால் முடியும்’ – என்ற தலைப்பில், ‘உன் கருத்து’…, ‘உன் பார்வை’…, இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்னு நினைத்தேன்…. அதையே, கட்டுரையின் தலைப்பாகச் சொல்லலாம் என்று நினைத்தேன்… மேகலா  : வாவ்! Great கிருஷ்ணா…, இதே தலைப்பைத்தான் நானும் decide பண்ணியிருந்தேன்… நம்ம ரெண்டு பேர் மனசும் ஒண்ணு போல நினைக்குது கிருஷ்ணா.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கிருஷ்ணா… கிருஷ்ணர்  : நெசம்மாவா…. ஏய் லூசு…! உனக்குள்ளே இருப்பவன் நான்… உன்னோடவே சுற்றித் திரிபவன் நான்…. நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிய மாட்டேனா…. மேகலா  : ஓ….! ஆமாம்ல….. ஆனா, நீ நினைப்பதை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியலையே…, அது ஏன் கிருஷ்ணா…. ...

Maturity - பாகம் 11 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : அனுபவங்களைக் கடப்பது, மனிதனுக்கு அன்றாட நிகழ்ச்சிதானே… ஆனால், ஒவ்வொரு நாளும், தான் கடந்த அனுபவத்தை recall பண்ணி, எது நல்லது…, எது கெட்டது…, எதைச் செய்யலாம்…, எதைச் செய்யக் கூடாது…, எதனால் இது நடந்தது…, இது பாவமா…, புண்ணியமா…, என்று ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்க வேண்டும்… இன்று நடந்த விஷயத்தில், எத்தனை பேர் பயனடைந்தார்கள்…, எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள்…, என்று ஒளிவு மறைவு இல்லாமல் யோசிக்க வேண்டும்….   உன் மனசாட்சி வலியுறுத்துவதை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்….  திறமையாளர்கள், அவமானத்தைத் தடுக்க…, கர்வப் பட்டுக் கொண்டு, தன்னைத் தானே உற்சாகப் படுத்துவதெல்லாம் சரி…. ஆனால், அந்தக் கர்வம் அவனுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் வரைக்கும் தான்… அதையே தன் அடையாளமாக மனுஷன் பின்பற்றினால்.., அந்தக் கர்வமே, அவனை அழித்து விடும்…   கர்வம், maturity-யை promote பண்ணணுமே தவிர, மனுஷனை அழிச்சிடக் கூடாது…   அதற்காகத்தான் சொல்லுகிறேன்… மனசாட்சி எச்சரிப்பதை, காது கொடுத்துக் கேட்கணும்… அதே மாதிரி, ஒரு அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தை மனிதன் நன்றாக மனதில் நிலை நிறுத்...