Posts

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 16

கிருஷ்ணர்   : அடுத்து என்ன…. அவர்களுடைய நடையைப் பார்க்கலாமா…. மேகலா  : நடையா…. நடவடிக்கையா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : விடிய விடிய படித்த பின்னும், சீதைக்கு ராமன் சித்தப்பாண்ணு சொன்ன கதையா இருக்கு… இவ்வளவு நேரமும் கிராமத்து மக்களின் எளிய பழக்க வழக்கம், வாழ்க்கை முறை பற்றித்தானே பேசி வருகிறோம். அதுவே நடவடிக்கைகள் தானே…  நாம பேசப் போவது நடையைப் பற்றி…. மேகலா  : ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா’ கிருஷ்ணர்  : ‘தடம் பாத்து நடை நடந்து’ – ‘வாவ்’…. எப்படிப்பட்ட வார்த்தை…  நம் முன்னோர்கள் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என்பதை, எப்படி அழகாக, ‘தடம் பாத்து நடை நடந்து’ என்று கவிஞர் சொல்லியிருக்கிறார்….,  பார்த்தாயா மேகலா…. மேகலா  : Oh! நீ தடம் பாத்து நடப்பதைச் சொல்லுகிறாயா…. நான் நடப்பதைப் பற்றிப் பேசப் போகிறோம் என்று நினைத்தேன்…. கிருஷ்ணர்  : நீ தானே பாட்டுப் பாடினாய்…. சரி, சரி…, நீ எந்த நடையைச் சொல்லப் போகிறாய்… மேகலா  : இது உடம்பு இளைப்பதற்காகப் போகும் walking இல்ல கிருஷ...

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 15

மேகலா   : ஆமாம் கிருஷ்ணா…. எங்க ஐயாமையோட தண்டட்டியை உருக்குவதற்கு, தங்க நகை செய்யும் ஆசாரி என்ன செய்தார் தெரியுமா…. மேலே சுற்றியிருந்த தகடை, chocolate paper மாதிரி உரித்து எடுத்து விட்டார்.   அப்பத்தான் எங்களுக்குத் தெரியும்…. தண்டட்டியில், தங்கம் கொஞ்சம், அரக்கு நிறைய என்று… கிருஷ்ணர்  : Oh……! உங்க ஐயாமை காலத்துக்குப் பிறகு, யாரும் தண்டட்டி அணியவில்லையோ…. மேகலா  : எங்கள் உறவுகளில், எங்க ஐயாமா generation-க்குப் பிறகு வந்தவர்கள் யாரும் காது வளர்க்கவில்லை கிருஷ்ணா…. காது வளர்த்துக் கொடுப்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியவும் தெரியாது கிருஷ்ணா….. ஆனால், ‘தோடு’ போடும் இடத்தின் மேல் பகுதியில், ‘கொப்பு’ என்ற nut-screw type என்ற நகையை அணியத்தான் செய்தார்கள். உனக்குத் தெரியுமா கிருஷ்ணா….  ஒற்றைக்கல் கம்மலை, ‘கடுக்கன்’ என்பார்கள்  கிருஷ்ணா…. இந்தக் கடுக்கனை பொதுவாக ஆண்கள்தான் பெரும்பாலும் அணிவார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! ஆண்களுக்கு ‘கடுக்கன்’ என்றால், பெண்களுக்கு…. மேகலா  : ஏழுகல் தோடு, தண்டட்டி, மூக்குத்தி, புல்லாக்கு…. கிருஷ்ணர்  : மூக்குத்தி தெ...

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 14

கிருஷ்ணர் : கிராமீய வாழ்க்கையின் அழகைப் பேசத்தானே ஆரம்பித்தோம்.... எவ்வளவு பெரிய இலக்கியங்கள் இங்கிருந்து பிறந்திருக்கிறது.... யப்பா.... மேகலா : இது ஊத்துத்தண்ணி கிருஷ்ணா.... தோண்டத் தோண்ட ஊத்துத்தண்ணி பெருகத்தானே செய்யும் கிருஷ்ணா.... கிருஷ்ணர் : சரி..., கிராம மக்கள் நடை, உடை என்று எதுகைக்காகச் சொன்னாயோ தெரியவில்லை. ஆனால், கிராம மக்களின் costume பற்றி நீயும் தெரிந்து வைத்திருப்பாய். ஆண்கள் என்றால், இடுப்பில் ஒரு வேஷ்டி..., தோளில் ஒரு துண்டு... பெண்கள் என்றால், ஒன்பது கெஜம் சேலை.., அதுவும் பின்கொசுவம் வைத்து கட்டப்படும் சேலை.... Blouse-லாம் கிடையாது... கிருஷ்ணர் : அப்படியா.... ஆண்களுக்கான costume நான் அறிந்தது தான். என்னுடைய costume-மும் அதுதானே... பெண்களின் உடையைப் பற்றிச் சொல்லு மேகலா; நான் தெரிந்து கொள்கிறேன்... மேகலா : ஒரு விவசாயி, வேஷ்டி மட்டும் தான் கட்டுவான். பண்ணையம் பார்க்கும் போது, துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொள்வான். வேட்டியை மடித்து தார்ப்பாச்சிக் கட்டுவான் என்பது எதற்காக.... இந்த வெய்யிலில் வேலை செய்யும் போது, சட்டையெல்லாம் தேவையில்லை. மண்ணோடு மண்ணாக...

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 13

மேகலா   : இது மட்டுமல்ல கிருஷ்ணா…. ‘பஞ்ச் டயலாக்’ மாதிரி, பழமொழியை உருவாக்கி, அதன் மூலம் எத்தனையோ தகவல்களை அடுத்த தலைமுறையினருக்கு சொல்லியிருக்கிறார்கள் கிருஷ்ணா. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’  – என்று ஒரு விவசாயி, விதைப்புக்கான காலத்தை சொல்லி வைத்தால், அது அழகான பழமொழி ஆகிப் போச்சு பார்த்தாயா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : சொல்லு மேகலா… இது மாதிரி கிராம மக்கள் சொல்லி வச்ச பழமொழிகளைச் சொல்லு… அதக் கேட்டாலே,  கிராமத்தான், psychological-ஆக, practical-ஆக, technical-ஆக எத்தனை ஞானமுள்ளவனாக இருந்திருக்கிறான்  என்று தெரிந்து விடும்…. ‘ ஆலும் வேலும் பல்லுக்குறுதி’  – என்று யார் சொன்னார்களோ…. ஆனால், அதில் பல்லுக்கான மருத்துவம் அடங்கியிருக்கிறது. எவ்வளவு அசால்ட்டாக சொல்லியிருக்கிறார்கள் பார். மேகலா  : கிருஷ்ணா! நீ psychological என்று சொன்னாயா…. எனக்கு உடனே, ‘ சின்னப்புள்ளைக வெள்ளாம, வீடு வந்து சேராது’  – என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருது. இன்றைய காலத்தில், சின்னப்புள்ளைக கையில், தைரியமாய், IT சம்பந்தப்பட்ட நுணுக்கமான project-ஐ கொடுக்கச் சொல்லுகிறார்கள். ஆனாலும், மிகப் பெரிய...

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 12

மேகலா   : ஏன் கிருஷ்ணா…. அப்படிச் சொல்லிட்ட….. இயற்கையோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை வாழும் கிராமத்தானுக்கு இயற்கை சம்பந்தப்பட்ட அறிவும், இயற்கையை அனுசரிச்சுப் போகும் திறனும், இயற்கையாக இருப்பது இயல்புதானே கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இயற்கை சம்பந்தப்பட்ட அறிவா…? எப்படிச் சொல்ற…? மேகலா  : கிருஷ்ணா, ஒரு விவசாயி, பள்ளிக்கூடம் சென்று பாடம் படிக்காமலேயே, கரிசல் மண்ணில் இது விளையும், செவக்காட்டு மண்ணில் இது நல்லா விளையும் என்று மண்ணைக் கையில் அள்ளிப் பார்த்தே, அதன் ஈரத்தன்மையை வைத்தே கண்டு பிடித்து விடுவான். மண்ணை ‘லேப்’ பரிசோதனை செய்துதான், இத்தனை சதவீதம் மக்னீஷியம், இவ்வளவு பொட்டாசியம் என்று சொல்லணும்னு அவசியமில்லை…  மண்ணைக் கையில் எடுத்து, அதன் பிசுபிசுப்புத் தன்மை, வாசனையை வைத்தே, இதில் என்னென்ன மணிச்சத்துக்கள் இருக்குன்னு கண்டுபிடிச்சிடுவாங்க.  நிலத்தடியில் நீரோட்டம், எவ்வளவு ஆழத்தில், எவ்வளவு density-யில் இருக்கு என்பதை, நிலத்தில் எழும் அதிர்வைக் கேட்டே கண்டுபிடித்து விடுவார்கள் கிருஷ்ணா… அதிசயமில்லையா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இதிலென்ன அதிசயம் மேகலா….  மனுஷன் பி...

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 11

மேகலா   : கிருஷ்ணா…. வயல்வெளிகளில் உழுவதற்கு ‘டிராக்டர்’ வருவதற்கு முன்பெல்லாம்… நுகத்தடியால் இணைக்கப்பட்ட, காளை மாடுகளைப் பூட்டிதான் உழுவார்கள் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : Oh! ’நுகத்தடி’ன்னா… மேகலா  : தெரியாத மாதிரி நடிக்காத கிருஷ்ணா… இரண்டு காளை மாடுகளை இணைப்பது ‘நுகத்தடி’. இந்த நுகத்தடியில், ‘கலப்பை’, அல்லது ‘ஏர்’ இதைச் சேர்த்துக் கட்டி, வயக்காட்டில் உழுவார்கள். நிலத்தை உழும் உழவன், மாடுகளை ஓட்டிக் கொண்டே செல்வான். இங்கு கலப்பை, நிலத்தில் கோடு இழுத்துக் கொண்டே செல்லும்; கீழிருக்கும் மண்ணு மேலே வரும், மேலிருப்பது கீழே சென்று, நிலத்தைப் புரட்டிப் போட்டு பதப்படுத்தும்; அவ்வப்போது, மாட்டின் கோமியமும் (சிறுநீர்), சாணமும், நிலத்திற்கு உரமாகப் பயன்படும். ஈர நிலமாக இருக்கும் பட்சத்தில், நிலத்தைக் கிழித்துச் செல்லும் கலப்பை மீது உழவர்கள் நின்று கொண்டும், ஒரு காலை, வயலில் புதைய விட்டுச் சென்று, விதை விதைக்க தயார்படுத்துவார்கள்.  அப்பொழுது, பாடத் தெரிந்தவர்கள் பாடிக் கொண்டே வேலை செய்வார்கள்….. இந்தப் பாட்டுக்கு ‘ஓதப்பாட்டு’ என்று பெயர் கிருஷ்ணா.  தயார் நிலையில் வைத்திருக்கும...

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 10

மேகலா   : இயற்கைக்கும், இசைக்கும் சம்பந்தம் இருக்கும் போல கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : எப்படிச் சொல்ற….. மேகலா  : ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் கூட, மேய்ச்சலுக்கிடையில், புல்வெளியைப் பார்த்தவுடன், புல்லாங்குழல் வாசிப்பதில்லையா…  இயற்கையை ஒட்டிய வேலையைப் பார்ப்பவர்கள், தங்கள் வேலைக்குத் துணையாக, இசையை அழைத்துக் கொள்வார்கள் போல… கிருஷ்ணர்  : சமயம் பார்த்து என்னையவே கலாய்க்கிறாயா… மேகலா  : நான் கலாய்க்கல கிருஷ்ணா… நெசம்மாதான் சொல்றேன் கிருஷ்ணா… கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்பவர்கள், ‘ஏலேலோ’, ‘ஐலசா’ என்று வார்த்தைகளைப் போட்டு, ‘ஏல ஏலோ ஏலேலேலோ’ – என்று பாடித் தங்கள் களைப்பை நீக்கிக் கொள்வதில்லையா… இந்த வார்த்தைகளைப் பார்த்தாலே, இது மீனவர் பாடியது; இது ஏற்றம் இறைக்கும் போது பாடியது என்று தெரிந்து கொள்ளுமளவுக்கு, அதன் இசையும் நம் மனதைக் கொள்ளை கொண்டு விடும். நாம் ஏற்கனவே ஒரு பாடல் பார்த்திருக்கோம்ல கிருஷ்ணா….. ‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்….’  என்று பெண் அலுப்பாய் பாட, உடனே அவன் பாடுகிறான்… ‘ காடு விளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது...