Passion - பாகம் 3
கிருஷ்ணர் : சமீப காலத்தில் தான், சமையல் வேலை செய்பவர்களின் தனித்தன்மை மக்களைக் கவர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்…
மேகலா : இருக்கலாம் கிருஷ்ணா…. அதிலும், தொலைக்காட்சி, social media என்று மக்களுக்கு close ஆக இருக்கும் media மூலமாக, இவர்கள் சமையல் வேலை செய்தாலும், அதையும் நாங்கள் ரசிச்சிதான் செய்கிறோம் என்று பெருமையாக videos வெளியிடுகிறார்கள். நமக்கு, அவர்களுடைய சுவையான recipes-சும் கிடைக்கிறது…. அவர்களுக்கு, சமையல் மீது இருக்கும் காதலும் புரிகிறது….
கிருஷ்ணர் : வாவ்! சூப்பர்…, சூப்பர்…
மேகலா : ‘வாவ் chef’ என்று ஒரு chef, channel நடத்துகிறார் கிருஷ்ணா… அவர் கற்றுக் கொடுக்கும் போது…., பேசும் English…, அதைப் பற்றி உன்னிடம் சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…. அவர் Hyderabad-ஐச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் சில காலம் வேலை பார்த்திருக்கிறார். அதனால், South Indian dishes தான் நிறைய செய்து காட்டுவார். ஆங்கில உச்சரிப்பு, நிறுத்தி, நிதானமாகச் சொல்லும் பாணி…., ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட புரியும் மொழியில் பேசுவார் கிருஷ்ணா…. குறிப்பாக, ‘அரேப்மண்டி’ என்று ஒரு dish…. இதைச் செய்யும் போது, ‘பிரியாணி, தன் தலை மேல் சிக்கன், முட்டை’, என்று வித விதமாகச் செய்து…, கடைசியில், ‘வாவ்’ என்பார்… நமக்கு உடனே செய்து பார்க்கணும்னு, ‘ஜொள்ளு’ வரும்…. தன் வேலையை, deep-ஆ நேசிக்கிறவங்களால் மட்டும் தான், ‘வாவ்’ என்று feeling ஓட சொல்ல முடியும்…. அவருடைய ‘வாவ்’…, தான் செய்த வேலையை, அவரே பாராட்டிக் கொள்வதாக இல்லை… அந்த dish-ன் மணம், சுவை…, இதை யார் செய்தாலும், ‘வாவ்’ தான்… ‘மெய் மறந்து’, ‘மனம் நிறைந்து’…, ‘வாவ்’ என்னும் போது, ‘அரேப்மண்டி’யை சுவைத்த உணர்வு, நமக்குக் கிடைக்கும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இதைச் சொல்லும் போது, நீ எப்படி ரசித்திருக்கிறாய் என்று புரியுது….
மேகலா : நான், சமையல் கலையை இப்படி சொல்றேன்ல கிருஷ்ணா…, இப்போ, இந்தத் தலைமுறையின் மத்தியில் trending ஆக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ‘passion’ என்னன்னு சொல்லு பார்க்கலாம்….
கிருஷ்ணர் : Baking ‘cake’ தானே… நம்ம சந்தியா கூட…, படிக்கிற காலத்திலேயே, ’நான் future-ல, baking master ஆகத்தான் வருவேன்’னு சொல்லி, அதன்படிதானே, ‘Lavonne Academy of baking science institute’-ல் join பண்ணினாள்….
மேகலா : கிருஷ்ணா…, அவ அதில் படிக்கும் காலத்தில், எத்தனை passion-ஓடு படித்தாள் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்று, நடைமுறையில் அவள் ஒவ்வொரு cake செய்யும் போதும்…, அதில் அவள் கொடுக்கும் கவனம், sincerity, kitchen-ஐ handle பண்ணும் லாவகம்…., product-இல் perfection…., அடேயப்பா…, சொல்லிக்கிட்டே போகலாம்…. நான் கூட, ‘நானும் உன்னிடம் சேர்ந்து கத்துக்கிடவா சந்தியாம்மா’ என்று ஏக்கத்துடன் கேட்டிருக்கிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்படித்தான் மேகலா…. ஒரு ஓவியம் வரையும் போதோ…, ஒரு சிற்பி செதுக்கும் போதோ…, அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால், நமக்கும் அப்படித்தான் தோணும். நம்மை மறந்து, காற்றிலே வரைவது போல, கைகள் இயங்கும்… அது ரசிப்பவர்களின் இயல்பு…
மேகலா : கிருஷ்ணா…, நீ சொல்லுவது ரொம்ப சரி கிருஷ்ணா…. யாராச்சும் drawing வரைவதைப் பார்க்கும் போது…, நமக்கும் காற்றிலே வரைவது போல, கைகள் பரபரக்கத்தான் செய்யும் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : இது மட்டுமில்ல மேகலா…. சத்தியமாச் சொல்லு…. ’எங்க வீட்டுப் பிள்ளை’ல . M. G. R., ‘மாயா பஜார்’ல ரங்காராவ்…, வாய்க்குள் தோசையை அமுக்கி மொக்கும் போது, உன் வாய் ஜொள்ளு விடல…..
மேகலா : ஹி…, ஹி…., ஆம்மாம் கிருஷ்ணா…. அதிலயும், M. G. R., வாய்க்குள்ள தோசைய மொக்கிக்கிட்டு…, 4 பொங்கல்…, 4 வடை அப்படீன்னு சொல்லும் போது, நமக்கும் மூச்சு முட்டும்…, பசிக்கவும் செய்யும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நாந்தான் அப்பவே சொன்னேனே… உனக்கு சாப்பிடுவதும், passion-னு….
மேகலா : ஐயோ கிருஷ்ணா…. ஒருத்தர் ரசிச்சி சாப்பிடும் போதோ…, ஒரு recipe-ஐ, ரசிச்சி, விவரிச்சி சொல்லும் போதோ…, ஜொள்ளு வருவது மாதிரி…, interesting ஆகத்தான் இருக்கும் கிருஷ்ணா… இது food-க்கு உண்டான ஒரு குணம்…. நாம, baking-ல இளைய தலமுறையினரோட ‘passion’ எப்படியெல்லாம் ‘பரிமளிக்குது’ங்கிறது பத்திப் பேசுனோம்ல கிருஷ்ணா… சந்தியா city பொண்ணு… அதிலும், baking மட்டும் தான் பண்ணுறா… இவளோட தனித்துவம், cake-அ customer’s place-க்கே delivery பண்ணப் போயிருவா… இதுக்கு அவ சொல்லும் காரணம் என்ன தெரியுமா கிருஷ்ணா… Customers-க்கு delivery பண்ண, service book பண்ணா…, அவங்க cake-அ damage பண்ணிருவாங்க ஆச்சி… அதான், careful-ஆ, நானே கொண்டு போறேன்னு… அவ்வளவு பொறுப்பாகவும் சொல்லுவா… எனக்கு அப்பதான் ஒரு விஷயம் clear-ஆ புரியுது கிருஷ்ணா… நமக்கு விருப்பமான செயலை நாம் செய்ய முனையும் போது…, வெறுமனே, எனக்கு இது ரொம்பப் பிடிக்கும்… இது என் passion என்பது மட்டுமல்ல… Product நல்லா வரணுமே என்ற கவனம், முனைப்பு…. கவனத்துடன் செய்வதால், perfection…. வேறு சிந்தனை இல்லாமல் செய்வதால், dedication…, முழு திருப்தி… செய்த product, சரியாக reach ஆக வேண்டும் என்ற பொறுப்பு… இத்தனை குணங்களும் சேர்ந்து வருவதுதான், ‘passion’ என்ற குணத்தின் தனி அடையாளம் போல கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Exactly… நீ சொல்லுவது, very true மேகலா….
மேகலா : இந்த baking உலகத்துல, இளந்தலைமுறையினர் நெறைய பேர் சிகரம் தொட்டிருக்காங்க கிருஷ்ணா…. எனக்கு ‘சிங்கப்பெண்ணே’ award கொடுத்தாங்கல்ல கிருஷ்ணா… அப்போ, ஷீலா என்ற பொண்ணுக்கும், இந்த award கிடைத்தது. அவள், கல்யாணத்துக்குப் பிறகு…, அதுவும் குழந்தை பிறந்த பிறகு, பிள்ளைகளைத் தன் மாமியாரிடம் விட்டு விட்டு, France போய், baking course படிச்சிட்டு வந்திருக்கா… இப்போ, சிவகாசியில, famous ‘home baker’…. அவள் statement என்னன்னா…, ‘எனக்கு baking-னா ரொம்ப interest…. என் மாமியார், எனக்கு ரொம்ப support-ஆ இருந்ததினால, என்னால நிம்மதியா course முடிக்க முடிந்தது’ என்கிறாள். எனக்கென்னவோ…, அவளோட அதிமிஞ்சிய கற்றுக் கொள்ளணும்கிற ஆர்வம் தான்…, அவளை, பிள்ளைகளை மறந்து, கற்றுக் கொள்ள வைத்தது என்று நினைக்கிறேன்… அதன் பிறகு, தனி கவனம், முனைப்பு, எல்லாம் சேர்ந்து, இன்னைக்கு, சிவகாசியில கொடி கட்டிப் பறக்குறா கிருஷ்ணா….
(தொடரும்)
Comments
Post a Comment