திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 7 (நிறைவுப் பகுதி)
கிருஷ்ணர் : ‘வாழ்வியல் என்றால் என்ன….?
மேகலா : வாழும் முறையைப் பற்றிச் சொல்லுவது, ‘வாழ்வியல்’ கிருஷ்ணா… ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முறை இருக்கிறது… வள்ளுவர் கூட, ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ என்று சொல்கிறாரே… எழுத்துக்கள், அகரத்திலிருந்து தான் தொடங்குகின்றன… இது எழுத்தின் முறை… ‘ஆதி பகவன் முதற்றே உலகு’ – இந்த உலகத்தை முறையாக எதை வைத்து வரிசைப்படுத்தணும். ஆதி பகவன் எனப்படும் கடவுளை முதற்பொருளாகப் பார்ப்பதுதான் முறையான பார்வை… அது போல, நாம் வாழும் வாழ்க்கை, நல்லவனால, இனிய வார்த்தைகள் பேசுபவனாக…, சொல்லில் வல்லவனாக…, செயலில் திறமையானவனாக, பொறுமையாளனாக, அடக்கமுடையவனாக, நேர்மையாளனாக…, என்றெல்லாம் வாழ்ந்து காட்டக் கற்றுக் கொடுப்பதுதான், ‘வாழ்வியல்’ கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ சொன்ன அத்தனை குணத்தையும் வள்ளுவர் சொல்லிட்டாரா… அப்போ, ’திருக்குறள்’, ‘வாழ்வியல்’ போதிக்கும் வேதம் தானே…
மேகலா : Exactly… நீ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை கிருஷ்ணா… ஆனால் என்ன…, வாத்தியார் தான் strict ஆனவர்….!
‘பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல்’
என்று ‘லொடலொடன்னு’ பேசறவங்களை, ‘பதர்’ என்றே சொல்லி விடுவார் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : பின்னே சும்மாவா…. வாழ்க்கைக்கு உதவாத மாதிரி இருப்பவர்களை, strong-ஆ சொன்னாதான், படிப்பவர்களுக்கு கொஞ்சமாவது உறைக்கும்… வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் மூலம், வாழ்வது எப்படின்னு கற்றுக் கொள்ளணும்…. இதில் கற்றுக் கொள்ளவில்லையென்றால், எங்கு போனாலும், நம்மால் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாமல் போகலாம்… திருக்குறளும், ஒரு அனுபவம் தான்…. அதைப் படிக்கப் படிக்க, ஒவ்வொரு குணத்தையும், strong-ஆக வள்ளுவர் சொல்லும் போது…, ‘அட…, அப்துல் கலாமுக்கு ஏத்த மாதிரி குறள் சொல்றாரே… அச்சச்சோ…, அந்தக் குணத்தை நாம் கை விட வேண்டும்… ‘Very dangerous’ என்று சொல்றாரே… அட…, இந்தக் குறள்படி வாழ்தவரை எனக்குத் தெரியுமே…’ என்று உலகத்தின் அத்தனை அனுபவங்களையும், நம்ம கண்ணு முன்னாடி, ஈரடி குறளாக, ‘பஞ்ச் டயலாக்’காக சொல்லும் போது…, வாழ்வியல் முறைகளை, அத்தனை variation-ஐயும், ஆராய்ந்து தெளிவாகச் சொல்லிட்டாரே…, என்று சொல்லத் தோணுதுல… திருக்குறளை, பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கலாமா என்று உலகம் நினைக்கும் முன்னயே…, வள்ளுவரே ஒரு பல்கலைக்கழகம் தான் என்று சொல்லுமளவுக்கு, அத்தனை துறைகளைப் பற்றியும் எளிமையாகச் சொல்லி, திருவள்ளுவர் University ஆகி விட்டார்… இந்தப் பல்கலைக்கழகம், படிக்கும் ஒவ்வொருவரையும், நல்ல மனிதனாக, செயல் வீரனாக…, ஒரு நண்பனாக ஆக்காமல் விடுவதேயில்லை…. So, வள்ளுவரைப் படிப்போம்; நல்ல மனிதனாக வளர்வோம்…. So…, Ta…ta…, மேகலா… Good Bye
மேகலா : கிருஷ்ணா…, என்ன கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நான் போயிட்டேன்…
(நிறைவு பெற்றது)
Comments
Post a Comment