தலைமுறை இடைவெளி - பாகம் 2
மேகலா : ஆனால், robot இல்லாம என்னால இனிமே இயங்கக் கூட முடியாது… இதுக்கெல்லாம் என்ன காரணம் கிருஷ்ணா….?
கிருஷ்ணர் : ரொம்ப simple…. தலைமுறை இடைவெளின்னு லேசா சொல்லிரலாம். ஆனால், அதை விட முக்கியமான காரணம்…, உன்னுடைய கற்றுக் கொள்ளும் திறன்…, voluntary retirement வாங்கிருச்சி… ஏற்கனவே படித்த அறிவு போதும் என்று தன்னிறைவு அடைஞ்சிருச்சி… ஒரு government officer, பென்சன் ரூபாய்ல சந்தோஷமாய், திருப்தியாய் வாழ்க்கையை நடத்துவது போல, உன்னுடைய அறிவும், புதிதாய் அறிந்து கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டது… அதனால்தான், இன்றைய தலைமுறையிலிருந்து நீ விலகி இருக்கிறாய்….
மேகலா : அப்படிங்கிறயா கிருஷ்ணா… புதிய பாடம் எனக்கு மண்டையில் ஏறாதா…
கிருஷ்ணர் : யார் சொன்னது… அதெல்லாம் ஏறும்… அதற்கான internet connection-ஐ நீ கொடுப்பதில்லை… அதான் தகராறு… தலைமுறை இடைவெளி அறிவில் இல்லை… உன் காலத்திலும்…, உனக்கு முன்னாலும், அறிவியல் விஞ்ஞானம் இருக்கத்தான் செய்தது… சொல்லப் போனால், ஆதிமனிதன் பிறந்த காலம் தொட்டே, அறிவியலுக்கும் அவனுக்கும், tug of war நடந்து கொண்டே வருகிறது... அடுத்த தலைமுறையின் வளர்ச்சி வரும் போது, நேற்றைய விஞ்ஞானத்தை இன்று அவன் புதிதாக மாற்றி அமைக்கிறான்… தலைமுறையில் இடைவெளி வருகிறது…. 18-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளின் மறு அவதாரம் தான்…, இன்றைய கண்டுபிடிப்புகள்… அறிவில் இடைவெளி கிடையாது… மாற்றியமைக்கும் போதுதான் இடைவெளி வருகிறது…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…, எனக்கும் இப்பத்தான் நிறைய சம்பவங்கள் நினைவுக்கு வந்து, இடைவெளியின் அவசியமும், அதன் வீரியமும் புரிகிறது. எங்கள் வீட்டில், வீடு கட்டும் வேலைக்கு, carpenter வேலை பார்க்கணும். அதற்கு மரம் வாங்க, செங்கோட்டை போகணும். இதெற்கெல்லாம் எங்க ஐயாப்பாதான் போவார்… அவர் ஒரு சிறந்த கட்டட மேஸ்திரி. இந்த தளவாடங்களை எங்கு வாங்கணும், எங்கு விலை சகாயமாய் கிடைக்கும் என்பதில் அவர் ‘கில்லி’… மரம், அவர் காலங்களில், மரத்தை slice பண்ண ஆசாரி, ‘ரம்பம்’ கொண்டுதான் அறுக்கணும்… இப்போ, எங்க அப்பா காலம்… மரத்தை slice பண்ண, machine வந்திருச்சி… எங்க ஐயாப்பா கணக்குப்படி, கையளவு கொடுத்து slice பண்ணா, ஒரு slice-க்கு, இவ்வளவு ’ச.மீ’ என்ற கணக்கு போடுவார்… எங்க அப்பா கால கணக்குப்படி, machine 1 1/2-க்கு 5ங்கிற அளவில்தான் ‘cut’ பண்ணும். இத்தனை slice வாங்கணும் என்று எங்க அப்பா, தச்சரிடம் சொல்லி பணம் கொடுக்கிறார்… எங்க ஐயாப்பா, ‘நீ சொல்ற கணக்குப்படி வாங்க முடியாது… என் கணக்குப்படிதான் வாங்கணும். நீ சொன்னபடி மரத்தை அறுத்தால், செலவு ரொம்ப ஆகும்’ என்று சண்டை போடுகிறார். எங்க அப்பா, carpenter-இடம், ‘அவர் அப்படித்தான் சொல்லுவார். இப்பல்லாம், மரக்கடைல, machine-லதான் மரத்தை slice பண்ணுவாங்க. நீங்க கையளவு அளந்தா, ஒரு நூலளவு தவறுனாலும், சதுர அடிக்கணக்கில் மாறுபடும். நமக்குத்தான் நஷ்டமாகும். ஐயாவுக்குப் புரியற மாதிரி எடுத்துச் சொல்லி, வாங்கி வாங்க’ என்று சொல்லி, பணம் கொடுத்தார்…. எங்க ஐயாப்பா சத்தம் போட்டுக்கிட்டே போனார்…. அவருக்குத்தான் மர அறுப்பு முறை நல்லாத் தெரியுமாம். எங்க அப்பா, சிரிச்சிக்கிட்டே, எனக்கு அந்த calculation-ஐ விளக்கினார். இப்போதான் புரியுது…, அது தலைமுறை இடைவெளி என்று…
கிருஷ்ணர் : தலைமுறை இடைவெளியினால், உங்க அப்பா வேண்டுமானால், machine-ல் slice பண்ணிய மரத்தை வாங்கி வரலாம்… ஆனால், கையளவு calculation என்பதை நீ அவ்வளவு லேசாக எடை போட்டு விடாதே… machine slice பண்ணினா…, தடியில் இருக்கும் வளைவு நெளிவுகளை, கண்டு கொள்ளவே செய்யாது. அதை மறுபடியும் tools வச்சி, தேய்த்துத்தான் நிமிர்த்தணும்… நெளிவை எடுக்க முடியலேன்னா, அது waste தான் ஆகும். ஆனால், கையளவு என்பது, தடியை slice பண்ணும் போதே, நெளிவுகளில், ‘hand plane’ கொண்டு தேய்த்துத் தேய்த்து, நெளிவு வளைவுகளை சரி பண்ணி விடுவார்கள்… அல்லது, நெளிவுத்தடியை வாங்க மாட்டார்கள்… அப்பேர்ப்பட்ட கையளவு, machine வந்த பின் காணாமல் போயிருச்சி… அந்தக் கால வீடுகளைப் போய் பார்… Ceiling-ல் உத்ரம் இல்லாத வீடு இருக்காது. வீட்டின் மேற்கூரை எவ்வளவு நீள அகலம் என்றாலும், pillar இல்லாத சுவர்.. கம்பிக்கட்டு கட்டாத ceiling…. இவை அனைத்தையும், உத்ரம் தாங்கும்… கம்பிக்கட்டு தேவையில்லை. மரத்தை கையளவு அளந்த மேஸ்திரி கட்டியதை இன்று, துல்லியமாகக் கணக்குப் போட்டு கட்டிடம் கட்டும் engineer-ஆல் கட்ட முடியாது… வெறும் செங்கலும், சுண்ணாம்பும், கருப்பட்டிச் சாறு மட்டும் போதும்…, அந்தக் கைகளுக்கு….
(தொடரும்)
Comments
Post a Comment