Posts

திருக்குறளில் வாழ்வியல் - பாகம்4

மேகலா : எனக்கு மகாபாரதத்தில் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது கிருஷ்ணா…. அர்ஜுனனை, பரமசிவனாரிடமிருந்து, பாசுபதா அஸ்திரத்தை வரமாகப் பெற்று வா என்று கிருஷ்ணர் பணிக்கிறார். பரமசிவனாரிடமிருந்து ஒரு அஸ்திரத்தைப் பெற வேண்டும் என்பது சாதாரண task இல்லை…. செயற்கரிய இந்தச் செயலைச் செய்வதற்கு அர்ஜுனன் காட்டிற்குச் சென்று தவம் செய்யப் புறப்படுகிறான்…. மனசார பரமசிவனாரை வேண்டி, நமச்சிவாய மந்திரத்தை ஓதுகிறான். அந்தச் சமயத்தில் மனசு கண்டபடி அலை மோதினால், எப்படி இறையனாரின் காதில் நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். தன் ஆசைகளை…, கோபத்தைக் கட்டுப்படுத்தி, நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்கிறான். வீரத்தில் சிறந்த அர்ஜுனனின் தவத்தை மெச்சி, பரமசிவனார், வேட்டுவராக இறங்கி வந்து, அர்ஜுனனின் கவனத்தை திசை திருப்ப, காட்டுப்பன்றியை அனுப்புகிறார். தவம் கலைந்த அர்ஜுனன், பன்றியை விரட்ட அம்பெய்துகிறான்… வேட்டுவனான பரமசிவனாரும், பன்றியை நோக்கி அம்பை விட, இருவருக்கும் மோதல் வரும்படி ஒரு நாடகம் நடத்துகிறார். இருவரும், பன்றி தனக்கானது என்று சொல்ல, மற்போர் புரிகின்றனர். சந்தடி சாக்கில், இறையனார், அர்ஜுனனின் தோள்களைக் கட்டிப் பிடிக்கிறார...

திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 3

மேகலா : அன்புடையவர்களின் அன்புக்கு, அர்த்தம் சொன்ன வள்ளுவர், ‘அறம்’ என்பதற்கு விளக்கம் எப்படிக் கொடுக்கிறார் தெரியுமா…. ‘அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ கிருஷ்ணர் : இதன் ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் என்ன மேகலா… மேகலா : கிருஷ்ணா…., அழுக்காறுன்னா, பொறாமை…, அவா – பேராசை, வெகுளி – கோபம், இன்னாச்சொல் – கெட்ட வார்த்தை…, கொடுமையான வார்த்தை பேசுதல்… – இந்த நான்கையும், நமக்குத் தேவையில்லை என்று ஒருவர் ஒதுக்கி வைத்து வாழ்ந்தால், அதுவே சிறந்த அறமாகும்… வேதம் கற்பதை விட…, கடவுள் மேல் பக்தி செலுத்துவதை விட…, பெரும் செல்வம் தேடுவதை விட, ஒரு மனிதன், பொறாமை, பேராசை, கோபம், கெட்ட வார்த்தையை விட்டொழித்தலே சிறந்த தர்மமாகும் என்கிறார் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ஒரு நல்ல மனுஷன், அன்புடையவனாக, சிறந்த வாழ்க்கைத்துணை கொண்டவனாக, செயற்கரிய செயலைச் செய்பனாக இருந்து விட்டால்…, யப்பா…, அப்படிப்பட்ட மனிதர்கள்…, தெய்வத்திறகு சமமானவர்கள் ஆகிறார்கள் இல்லையா… குறள், வாழ்வியலை மிக எளிமையாக நமக்குக் கற்றுக் கொடுக்கிறது மேகலா… மேகலா : ஆமாம் கிருஷ்ணா… குறளைப் படிக்கப் படிக்கத்தான்…, வாழ்...

திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 2

கிருஷ்ணர் : இப்படிப்பட்ட அறிவில் பெரியோர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்… அவரைக் கைப்பிடிக்கும் துணை நலம், எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா…. மேகலா : சொல்லாமல் இருப்பாரா கிருஷ்ணா… ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” ஒரு பெண் கற்புடையவளாக, தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனின் புகழையும், அவன் உயர்வையும் காத்து, சோர்வடையாமல், தன் குடும்பத்தைத் தாங்குவதற்கும், காப்பதற்கும் எப்பொழுதும் தயாராகவே இருப்பாள்.. . அப்படிப்பட்டவள் வாழ்க்கையில் இல்லத்தரசியாக அமைந்தால், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்… நீயே யோசித்துப்பார் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ‘வாவ்’… ஆமாம்… நல்ல மனைவி, கற்பினில் நெருப்பாக ஜொலிப்பாள். தன் கணவனுக்கு, எல்லா சோதனைகளிலும், சாதனைகளிலும் கூடவே, தைரியமாக இருப்பாள். ஒரு கணவன் புகழ் பெறுவதில் கூட, மனைவியின் பொறுமை, இல்லத்தைக் கட்டிக் காத்தல், குழந்தைகளை வளர்த்தல் என்ற பல பரிமாணங்களில் புகழ் சேர்ப்பாள்… அப்படி யாரையாவது உனக்குத் தெரியுமா…. மேகலா : கிருஷ்ணா…., ஒரு முறை, பாடகர் S. P. பாலசுப்ரமணியத்திற்கு...

திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 1

மேகலா : கிருஷ்ணா…, கிருஷ்ணா… கிருஷ்ணர் : என்னம்மா மேகலா…, உங்க ஊருல திருவிழாலாம் முடிஞ்சிருச்சா… இப்பத்தான் எழுதணும்னு நெனப்பு வந்துச்சாக்கும்… ராமாயணமாவது படிச்சியா… ராமநவமி கூட இப்பத்தான் முடிஞ்சிது… மேகலா : கிருஷ்ணா…, ராமநவமி ஆரம்பிக்கும் போது, விசுவாமித்திரர் கதை படிச்சேன்… நவமி நிறைவு நேரத்தில், பரசுராமரிடம் இருந்த விஷ்ணு வில்லை ராமர் முறித்த கதையைப் படித்து சந்தோஷமடைந்தேன் கிருஷ்ணா… அப்பப்ப சோர்வாயிருந்தாலும், திருக்குறள் எழுதுவதையும்…, ராமாயணம் படிப்பதையும் விடல கிருஷ்ணா…. கிருஷ்ணர் : சரி…, இப்ப இங்க என்ன வந்திருக்கிற… ஏதாவது அரட்டையா… மேகலா : ஆமாம் கிருஷ்ணா… ‘வாழ்வியலும் வள்ளுவரும்’ என்ற தலைப்பைக் கூட யோசிச்சிட்டேன் கிருஷ்ணா… கிருஷ்ணர் : ஓ! தலைப்பே அமர்க்களமாயிருக்கே… 1330 குறளிலும் வாழ்வியல் பாடம் எடுத்திருக்காரு…. அத்தனையுமா சொல்லப் போற…. மேகலா : இல்ல கிருஷ்ணா… ஒரு 5 அல்லது 10 குறளை மட்டும் எடுத்து எழுதப் போகிறேன்… கிருஷ்ணர் : ஓ! அப்படியா… சிறப்பா எழுது… உனக்கு எப்படி, திருக்குறளில் வாழ்வியல் எழுதணும்னு தோணுச்சி… மேகலா : அதுவா கிருஷ்ணா… இப்போ தினமும் திருக்குறள் விளக்...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 19 (நிறைவுப்பகுதி)

கிருஷ்ணர் : இதில் கிருஷ்ணர்…, கொலை செய்யத் தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்லுகிறேன்… அடுத்த நாட்டைக் கைப்பற்றத் தூண்டுவது மகாபாவம்…. ஆனால், தன்னை அழிப்பதற்கு ஒருவன் புறப்பட்டால், அவனுடன் சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அதில் தப்பேயில்லை… தமிழில் ஒரு பழமொழி உண்டே…. ‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்…, வந்த சண்டையை விட மாட்டேன்’ – என்று சொல்வதில் தவறு கிடையாது. அந்த சண்டையில் தர்மம் ஜெயிக்க வேண்டும். நல்லவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது பொது விதி. உரிமைக்கான போர் என்று வந்தவுடன், பின் வாங்குவது, தன்னை நம்பிய மக்களை நட்டாற்றில் விடுவதற்குச் சமம்…. உன்னை ஒன்று கேட்கிறேன்… தீவிரவாதிகள், பாரத மக்களை, வரைமுறையில்லாமல் தாக்கும் போது, நம் அரசாங்கம், ‘போர்’, அதனால் ‘விளைகிற இறப்பு’…, சனாதன தர்மத்திற்கு எதிரானது…, அதனால் விட்டுக் கொடுக்கிறோம் என்று சொல்லி, போர் புரியாமல் இருந்திருந்தால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை போற்றவா செய்வார்கள்… திருப்பி அடித்ததனால், மக்கள் அரசாங்கத்தை வெறுக்கவா செய்தார்கள். இதில் தர்மம் என்னவென்றால், தீவிரவாதம் செய்தவர்களு...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 18

மேகலா : கிருஷ்ணா…, பதிவிரதை, மிதிலாபுரியில் வாழும் தர்மவியாதரைச் சென்று பார்க்கச் சொன்னவுடன், ஒரு எதிர்பார்ப்புடன் தானே, மிதிலாபுரிக்கு வருகிறார். வந்த இடத்தில், தர்மவியாதர் முனிவரை வரவேற்று, ’நீங்கள் பார்த்த பார்வையில் கொக்கு எரிந்து போனதால், அந்தப் பெண்மணி, என்னையும் கொக்கென்று நினத்தாயா என்று கேட்டு, என்னிடம் அனுப்பினாரா’ என்று கேட்டதும்…, ஏன் திகைத்துப் போகணும்…. கிருஷ்ணர் : இதெல்லாம் ஒரு சந்தேகமா… கௌசிகர் ஒரு முனிவர். இயல்பு வாழ்க்கையில் வாழும் பெண்மணிகளிடத்தும், ஒரு கசாப்புக்கடைக்காரரிடமும் தர்மசிந்தனை உண்டு என்பதை அறியாதவர். ஒரு எதிர்பார்ப்புடன் தான் வருகிறார் என்றாலும்…, ஒரு கசாப்புக்கடைக்காரர், இவ்வளவு துல்லியமாக, எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல், யாரிடமும் கேட்காமல், கொக்கு எரிந்ததையும், அதை நேரில் பார்த்த மாதிரி சொன்ன பதிவிரதையையும் சுட்டிக் காட்டும் போது, கசப்புக்கடைக்காரருக்கு இத்தனை தவவலிமையா என்ற வியப்பு வருவது இயற்கைதான்… அவர் இடத்தில் யார் இருந்தாலும் திகைக்கத்தான் செய்வார்கள்…. மேகலா : கிருஷ்ணா…, முதலில் கௌசிக முனிவருக்கு ஒன்றும் புரியவில்லை… தர்மவியாதரின் ஆழ்ந்த ஞ...