Posts

அழகு - பகுதி 21

கிருஷ்ணர்   : ஆம்மாம்……, பூக்களை….., பூக்களாகப் பார்ப்பதை விட, photo-வாகப் பார்க்கும் போது, அதற்கு அழகு மேலும் கூடி விடுகிறது மாதிரி இருக்கும் இல்லையா…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. என்னுடைய தோட்டத்தில், சின்னதாக 1 ரூபாய் size-ல் ஒரு பூ இருக்கிறது. அது செடியிலிருந்து வால் மாதிரி புறப்பட்டு அதன் உச்சியில் சின்ன பஃப் மாதிரி இருக்கும்….  சும்மா பார்க்கும் போது சாதாரணமாக இருக்கும் அந்தப் பூ, close-up-ல் photo எடுத்து பார்க்கும் போது, தோட்டத்தின் சூழலில் பூ ஒய்யாரமாகத் தெரியும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஸ்….ஸ்….. ஆமாம்ல; photography-யில interest இருப்பவங்க, ரசிச்சு photo எடுக்கும் போது…., காற்றில் அலையும் கூந்தலின் ஒரு முடி அசைவதைக் கூட மிக அழகாக எடுத்து விடுவார்கள்.  அதிலும், இயற்கையான சூழலில் photo எடுக்கும் போது, photo மட்டுமே ஆயிரம் கதை சொல்லுமே…. மேகலா  : கிருஷ்ணா…., எனக்கு ஒரு photo ஞாபகத்துக்கு வருது கிருஷ்ணா….. நடிகர் சிவாஜி கணேசன், ஒரு முறை காசி சென்றிருந்த சமயம்…., shooting கிடையாது…., கங்கையில் நின்று கொண்டு, கைகளை உயரே தூக்கி, இருள் விலகாத வைகறை விடியலில்...

அழகு - பகுதி 20

கிருஷ்ணர்   : இயற்கை சூழலை அழகாய் கொடுத்தது இருக்கட்டும்…. இப்போ, ஏதாவது simple….., ஆனா cute-ஆன அழகினைச் சொல்லேன் கேட்கிறேன். மேகலா  : ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு… அங்கு துள்ளிக் குதிக்குது கன்னுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப் பசு பாலை நன்றாய் குடிக்குது கன்னுக்குட்டி’ -இந்தப் பாட்டில் உனக்கு என்ன தெரியுது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன அருமையான பாட்டு மேகலா… முதல் வரியில், மேய்ச்சலில் பசு மேய்வதைப் பார்க்கிறேன்…. அதைத் தொடர்ந்து, துள்ளி வரும் கன்னுக்குட்டியைப் பார்க்கிறேன். வந்த கன்னுக்குட்டியை, நாவால் நக்கி, பசு தாய்மையில் கனிவதைப் பார்க்கிறேன். பசு அருகில் வந்ததும், கன்னுக்குட்டி, மடியை முட்டி முட்டி பால் குடிப்பதைப் பார்க்கிறேன். எளிமையான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, அழகான காட்சியை மாலையாகக் கோர்த்திருக்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை…. மேகலா  : இந்தப் பாட்டை வாசிக்கும் போதே, கண்ணெதிரே காட்சி அழகாய் விரிகிறதல்லவா…  இப்படி சின்னச் சின்ன சந்தங்கள், அழகான காட்சியை camera மாதிரி படம் பிடித்துக் காட்டுவதைப் பார்க்கலாமா….? கிருஷ்ணர்  : பார்க்கலாமே….....

அழகு - பகுதி 19

மேகலா   : இன்னும் ஒரு மறக்க முடியாத அனுபவம் உண்டு கிருஷ்ணா…. நான் U. S. A. சென்ற போது, ‘நயாகரா நீர்வீழ்ச்சி’ பார்க்க சென்றிருந்தோம் கிருஷ்ணா…. நயாகரா நீர்வீழ்ச்சி, Canada, U. S. A. என்ற இரண்டு நாடுகளின் எல்லைகளில், Buffalo என்ற ஊரில் அருவியாகக் கொட்டுகிறது கிருஷ்ணா…… அந்த அருவியை தூரத்தில் நின்று பார்ப்பதற்கே, கப்பல் மாதிரியான boat-ல் தான் சென்று பார்க்கப் போக வேண்டும். நாம் எட்ட நின்று பார்ப்பதற்கான இடத்தை அடைந்ததும், நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் சென்று பார்க்க விருப்பமுடையவர்கள் அதற்கான boat-ல் அனுமதி பெற்று செல்ல வேண்டும். கிருஷ்ணர்  : பார்ரா…. பெரிய பெரிய அனுபவமெல்லாம் கை வசம் வச்சிருக்க போல…. Falls-அ கிட்ட போய் பார்த்தோம்னு சொல்றயே….. தண்ணீர் உங்களைத் தெறிக்க விடலயா…. மேகலா  : கிருஷ்ணா, நாங்க சென்ற போது, மைனஸ் டிகிரி கிருஷ்ணா….. தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறல…., அவ்வளவுதான், கிருஷ்ணா…. எனக்கு உடம்பில விரல்நுனியை கூட வெளியில காட்ட முடியல….. ஸ்வெட்டர் போட்டு, அ துக்கு மேல ஜெர்க்கின்ஸ் போட்டு, கையை அதற்குள்ளே சுருக்கி கதகதப்பு ஏற்றினாலும்….,  அதையும் மீறி உடம்பு உதறுது....

அழகு - பகுதி 18

கிருஷ்ணர்   : சரி…., விமானம் take-off ஆகும் போது எப்படி இருக்கும்? நீ எப்படி அதை enjoy பண்ணினாய்….? மேகலா  : கிருஷ்ணா…., நானெல்லாம் ஆகாய விமானத்தில் பறப்பேனா என்பதே என்னாலேயே நம்ப முடியாதது. நான் airport-க்குள் நுழைந்து, boarding pass எடுத்து, luggage-ஐ, belt- ல் ஏற்றி விட்டு, checking எல்லாம் முடித்து, விமானத்திற்குள் நுழைந்ததே அதிசயமான ஒன்று. அதிலும் முன்னப் பின்ன அறியாத ஒரு சூழலில் என்னைப் பொருத்திக் கொள்ளவே திணறிப் போனேன் கிருஷ்ணா…. அதிலும், U. S. A போன போது, Bangalore to Delhi, domestic plane-ல் சென்று, domestic airport-க்குள் நுழைந்து, அங்கிருந்து international airport-க்குப் போகணும். அங்கு, U. S. A – க்குச் செல்லும் விமானத்தின் பிரிவு பார்த்து செல்ல வேண்டும்…, அதுவும் தனியாக….  எப்படிப் போனேன்…., எப்படி வந்தேன் என்று…. இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை.  இதெல்லாம் முடிந்த பின்,  விமானத்திற்குள், எனக்கான seat-ஐ சரி பார்த்து அமர்ந்தவுடன், ஒரு…, நிம்மதி, அதற்கும் மேல ஒரு குஷி வரும் கிருஷ்ணா…. அதை வார்த்தையால சொல்ல முடியாது…. கிருஷ்ணர்  : விட்டால், seat-...

அழகு - பகுதி 17

கிருஷ்ணர்   : நீ sea plane-ல் போயிருக்கிறாயா மேகலா….? மேகலா  : பார்த்து ரசிச்சிருக்கேன் கிருஷ்ணா. கார்த்தி, ஆதியெல்லாம் கூட்டிக் கொண்டு ‘மால்தீவ்ஸ்’ போயிருந்தோமில்ல கிருஷ்ணா. அப்போ நாங்க resorts-க்குப் போயிருந்தோமில்ல…. அப்போ, resorts-க்கு tourists-களைச் சுமந்து கொண்டு sea plane வரும். அதைப் பார்ப்பதற்காக, என்னைப் போல சிலரும் கரையோரம் நின்றிருந்தோம். தன் சிறகை விரித்து பறந்து வந்த விமானம், தாழ்ந்து பறந்து, கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி சரேலென தண்ணீரில் சீறிப் பாய்ந்து கொண்டு ஓடி வந்து கடலில் மிதக்கிறது. அப்பொழுது boat-க்கு நங்கூரம் போடுவது போல, விமானத்தை நிறுத்துவதற்கு, ஒரு பெரிய கயிற்றால், அருகிலிருக்கும் நடைபாதையில் உள்ள தூணில் கட்டி நிறுத்திய பிறகு, பயணிகளும், தள்ளாடிக் கொண்டு, நிற்கும் விமானத்திலிருந்து, மிகக் கவனமாக வெளியே வருகிறார்கள். அவர்களை pick-up பண்ணுவதற்காக ஒரு மிதவை platform காத்திருக்கிறது. அந்த platform-ல் கட்டப்பட்டிருக்கும் ஒரு கயிறை விமானத்தோடு சேர்த்து கட்டுகிறார்கள். பயணிகளை, platform-ல் இறக்கி விடுகிறார்கள் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இறக்கி விடுகிறார்களா…. ...

அழகு - பகுதி 16

மேகலா  : கிருஷ்ணா…. நீளமான train, compartment-ஆகப் பிரிக்கப்பட்டு, ஒரு compartment-க்கு 8 seats என்று அமைக்கப்பட்டிருக்கும். எதிரெதிரே 6 பேரும், நடைபாதை விடுத்து ஜன்னலோரமாக 2 seat-ம் உட்காருவதற்கு இடம் இருக்கும். ஆறு பேர் அமரும் seat-ல், இப்புறம் 3 பேரும், அந்தப்பக்கம் 3 பேரும் உட்காரலாமில்லையா…. அந்த உட்காரும் seat, ஒரு படுக்கை. அது தவிர, நடுப்புறத்தில் ஒரு பலகை; அது தொங்க விடப்பட்டிருக்கும். மேல்புறத்தில் ஒரு படுக்கை என்று இருக்கும். தொங்க விடப்பட்டிருக்கும் பலகையை, மேல்புறத்தில் மாட்டியிருக்கும் சங்கிலியில் கோர்த்து விட்டால், படுக்கையாகி விடும். இதை berth என்று சொல்லுவார்கள். இதற்கு 3-tier compartment என்று பெயர். சின்னப்பிள்ளைகள் train-ல் travel பண்ணுவதற்கு ஆசைப்படுவதே, upper berth-திலோ, நடு berth-திலோ படுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால் தான். நாங்கள் Hyderabad-க்கு ஒரு முறை train-ல் travel பண்ணினோம். ஷீத்தல், நான், சந்தியா, ஷீத்தல் அப்பா போகும் போது, சந்தியா train-ல் ஏறியவுடனேயே, upper berth-ல் ஏறிக் கொண்டாள். கண்களை உருட்டி உருட்டி, அவள் அதை enjoy பண்ணிய விதம் மறக்க முடியாதது...

அழகு - பகுதி 15

மேகலா   : அதுவும் அழகு தானே கிருஷ்ணா….. Single road-ன்னு இன்னைக்கு சொல்றோம். அந்தக் காலத்துல, ஒத்தையடிப் பாதைன்னு சொல்லுவாங்க…. தார் ரோடு இல்லாத , செவக்காடுகளில் மக்கள் நடந்து சென்று, நடந்து சென்று, ஏற்பட்ட பாதையை ‘ஒத்தையடிப் பாதை’ என்று சொல்லுவார்கள். அந்தப் பாதையில், இரண்டு காளைகளை வாண்டியில் பூட்டி, வண்டிமாடு ஓட்டுபவர், மாட்டை விரட்டவே வேண்டாம் கிருஷ்ணா…. பழகின பாதையில் மாடு தன்னாலே ஓடும். கொம்பில் கட்டியிருக்கும் சலங்கை நடனமாட, கழுத்து மணியும் அசைந்து அசைந்து ஒலி எழுப்பும். மாட்டுக்கும், வீடு வந்து விட்டது என்ற குஷி பிறக்கும்.   அந்த சமயத்தில், வண்டி மாடு ஓடும் ஓட்டம், அதைப் போல ஒரு குஷியான அழகு இருக்க முடியுமா கிருஷ்ணா….  கிராமத்து வாசனை; எளிமையை அழகாக வெளிப்படுத்தும் வாகனம்; என்ன இருந்தாலும் இன்றைய நவீன வாகனங்களுக்கெல்லாம் முன்னோடி;   சுத்தமான காற்றை கொஞ்சங்கூட மாசுபடுத்தாத வாகனம்;  நம்ம முன்னோர்களை நினைவுபடுத்துவது; காசு பணம் செலவில்லாதது….; என்று இத்தனை பெருமைகளை உள்ளடக்கிய இந்த வாகனத்தை எத்தனை முறை பேசினாலும், ஓட்டினாலும் அலுப்பில்லாதது; அழகானது கிருஷ்ண...