ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 124
தொடரும் பீஷ்மரின் உபதேசம் மேகலா : தர்ம நியாயங்கள் பற்றியும், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் பீஷ்மர் அளித்து வந்த விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்த தருமபுத்திரர், ‘மூத்தவரே! நன்மையை உபதேசிக்கும் தகுதி உங்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. உங்களைப் போல் அறிவுள்ளவர் இந்த உலகில் வேறு எவரும் இல்லை. ஆகையால் தான் உமது சொல்லை மிகவும் ஆர்வத்துடன் இங்கே கிருஷ்ணரும் கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இங்கு உங்கள் பேச்சைக் கேட்க அரசர்கள் பலரும் ஆர்வத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் பெரும் புண்ணியம் கிட்டக் கூடிய ஒரு பழைய வரலாற்றை எங்களுக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று விண்ணப்பித்துக் கொண்டார். ‘யுதிஷ்டிரா! பரமசிவனுக்கும் உமையவளுக்கும் இடையே நடந்த ஒரு அற்புதமான உரையாடலில், ராஜதர்மம் உட்பட பல தர்மங்கள் பற்றி பரமசிவர் விளக்கங்களைக் கூறினார். உமையவளும் பெண்களுக்கான தர்மங்களை விவரித்தார். பரமசிவனார், பிரம்மச்சர்...