Posts

தன்னம்பிக்கை - பாகம் 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்னம்மா…, அதுக்குள்ள வந்துட்ட… இன்னும் ஒரு வாரத்துக்கு நீ என்னைத் தேடவே மாட்டேன்னு நினைச்சேன்… என்ன…, bore அடிக்குதா…. மேகலா  : Bore அடிச்சா மட்டும் தேடுவதற்கு பரம்பொருள் கிருஷ்ணன்… சினிமா தியேட்டரா கிருஷ்ணா… நீ என் குரு… என் கடவுள்… அதுக்கும் மேல…, என் மூச்சே நீதான கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…, சரி…, ரொம்ப அலட்டாத…. இன்னைக்கு என்ன தலைப்புல பேசலாம்னு இருக்க… மேகலா  : கிருஷ்ணா…, என் வாழ்க்கையில், இந்த அளவுக்கு, பக்குவமாய், திருப்தியா நான் இருக்கேன்னா…, சந்தோஷமா எனக்கான கடமையைச் செய்யிறேன்னா…, அதெல்லாம் நீ எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்…  ’பிரச்னை என்பது, வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் வரத்தான் செய்யும்… அதையெல்லாம் பார்த்து துவண்டு விடுவதால் மட்டும்…, பிரச்னை விலகப் போவதில்லை…. அதற்குப் பதிலாக, பிரச்னையை தைரியமாக எதிர்கொள்…, சுலபமாகக் கடந்து செல்வாய்…’  என்று நீ கற்றுக் கொடுத்த பாடம் எனக்கு, தைரியத்தைக் கொடுத்தது… ஒவ்வொரு பிரச்னையையும் சந்திக்க, சந்திக்க…, வாழ்க்கையின் மீது…, ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்று சுவையான ந...

ஏணிப்படிகள் - பாகம் 5 (நிறைவுப் பகுதி)

மேகலா   : என்ன கிருஷ்ணா…, அதுக்குள்ள முடிச்சிரலாமான்னு கேட்கிற… ஏணிப்படிகளாக வாழ்ந்தவர்களைப் பற்றி யாரையாவது உதாரணம் காட்டினால், இந்த கட்டுரையின் concept இன்னும் strong ஆகுமே கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஏணிப்படிகள், ஏற்றி விடத்தானே செய்யும். அது அந்த இடத்துலயேதான் இருக்கும்… இருந்தாலும்,  உலகத்திலுள்ள அத்தனை ஆசிரியர்களையும் ஏணிப்படிகள் என்று தாராளமாகச் சொல்லலாம்…  ஒருவர் இருக்கிறார்… தன் வாழ்க்கையில் பல மாணவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து, ‘இப்படியும் முயற்சி செய்யலாமோ’ என்று சிந்திக்க வைத்த ஏணிப்படி… ஆனால், எவராலும் எட்ட முடியாத உயரத்தில் இன்றும் நிலைத்திருக்கும் ஒருவரை உனக்குத் தெரியுமா… அவர் சொன்ன ஒரு தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கேள்….  ‘அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்குத் துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கிருக்கிறது’  – இதை யார் சொன்னது தெரியுமா… மேகலா  : ஏவுகணைகளின் தந்தை டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்… கிருஷ்ணர்  : இந்தக் கூற்றினை, ஏதோ ஒரு room-ல் உட்கார்ந்து, article எ...

ஏணிப்படிகள் - பாகம் 4

கிருஷ்ணர்   : இன்னும் ஒன்று தெரியுமா….? உற்சவர்…, பிரம்மோற்சவ காலங்களில் மக்களைச் சந்திக்க வருவது வழக்கம். அந்த சமயங்களில், இந்தப் படிகள் வழியாகத்தான் இறங்கி வர வேண்டும்… பெருமாளும் எத்தனை முறை ஏறி, இறங்கியிருப்பார்… ஐயப்பன் கோவிலில், மேலே ஏற்றி விடும் இந்தப் படிகளுக்கு பூஜையே செய்வார்கள். ஏனென்றால், பரம்பொருளைக் காட்டுவதற்காக ஏற்றி விடும் ஏணிப்படிகள், புனிதப் பணியைச் செய்கிறது. அதுதான் விசேஷம்… இப்படித்தான்.., ஏணிப்படிகள், பயணிகளை பயணம் செய்ய வைப்பது மட்டுமல்ல…, வேறு உலகத்திற்கும் கூட்டிச் செல்வது போல, பக்தர்களுக்கு மோட்சத்திற்கான வழியையும் காட்டும்…. மேகலா  : கிருஷ்ணா…, பழநி மாதிரி கோவில்களில், படியேறி வருவது சிரமம் என்பதால்…, பழநியில் ‘விஞ்ச்’ வைத்திருக்கிறார்கள்… நாங்கள், ஹரித்வாரில், மானஸ தேவியை, இந்த ‘rope car-ல்’ ஏறித்தான் சென்று தரிசித்தோம்… திருப்பதி மாதிரி மலைக்கோவில்களில், படிகளில் ஏறிச் செல்வதற்கே பல மணி நேரம் ஆகும். அதனால், மலையைச் சுற்றிச் சுற்றி, கார், பஸ் செல்லும்படிக்கு பாதை அமைத்து, நம்மைச் சீக்கிரம் கூட்டிச் செல்கிறார்கள்… இன்னும், பலமாடிக் கட்டிடங்களில், ஏண...

ஏணிப்படிகள் - பாகம் 3

மேகலா   : டீச்சரோட அணுகுமுறைதான் கிருஷ்ணா…. முதல் முதலாக school-க்கு வருவதால், பிள்ளைகள் பயந்து போய் அழுகும் கிருஷ்ணா…. டீச்சர்…, அம்மாவிடம் கண்ணை சிமிட்டி போகச் சொல்லி விட்டு, ‘என்ன கண்ணு…, அழக் கூடாது…, இங்க பாரு…, டீச்சர் உனக்கு மிட்டாய் வச்சிருக்கேன் பாரு’ என்று mesmerizing-ஆ பேசும் போது, பிள்ளைகள் பாதி control ஆயிரும்…. ஒரு வாரம், பத்து நாள்…, இந்த கூத்து முடிந்ததும், முதலில் பாட்டு, rhymes என்று பிள்ளைகளுக்கு அபிநயம் பிடித்து சொல்லிக் கொடுப்பதும்…, பிள்ளைகள் ஆளுக்கொரு சுதியில் ராகம் இழுப்பதும்…, பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்…   நெசம்மா சொல்லணும்னா, ‘மாண்டிசோரி’ கல்வி கற்பித்தலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லுமளவு, டீச்சரின் சொல்லிக் கொடுக்கும் பண்பு…, அபாரமானது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இந்த மாதிரியான ஏணிப்படிகளால் மட்டும் தான், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கான பணியை சிறப்பாகச் செய்ய முடியும்… மேகலா…, சூப்பர்…, சூப்பர்…. மேகலா  : இது மட்டுமல்ல கிருஷ்ணா… நான் 3rd Std படிக்கும் போது, எங்க டீச்சர் எனக்கு எப்படி கணக்கு சொல்லிக் கொடுப்ப...

ஏணிப்படிகள் - பாகம் 2

கிருஷ்ணர்   : மேகலா…, உன்னிடம் ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். இப்பெல்லாம், பிள்ளைகளுக்கு சரியான school select பண்ணுவதற்கு, parents, Google-ல் தேடி…., friends-இடம் கேட்டு, அப்படியிப்படின்னு அலப்பறைய கூட்டுறாங்க… இதில் school fees விவகாரம் ஏதுவா இருக்கணும்கற எதிர்பார்ப்பு வேற இருக்கும்…. சரி…, நீயெல்லாம் school-ல சேரும் போது, நிலவரம் எப்படி… உனக்குத்தான் அந்தக்காலத்து கதையை பேசுறதுனா ரொம்பப் பிடிக்கும்ல… அதுவும், ஏணிப்படிகளைப் பற்றிப் பேசுறோம். அந்தக் காலத்து ஆசிரியர்களைப் பற்றி தெரிஞ்சிக்கலாம்ல…. மேகலா  : ஐயோ…, கிருஷ்ணா…, அந்தக் காலத்து நிகழ்ச்சிகளை பேசுறதுனாலே, எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. நீ வேற கேட்டுட்டயா… இதோ சொல்றேன் கிருஷ்ணா…. கிருஷ்ணா…, முதல்ல எங்க school-அப் பத்தி சொல்லணும் கிருஷ்ணா…. எங்கள் பள்ளி நூறாண்டுகள் கடந்தது… பல கலெக்டர்களை…, பல பொறியாளர்களை…, பல தொழிலதிபர்களை உருவாக்கிய இந்தப் பள்ளிக்கூடம்…, நாடார் சமுதாய மகமை பண்டினால் ஆரம்பிக்கப்பட்டது… விசாலமான area… ஒவ்வொரு வகுப்பும், காற்றோட்டமாக, விசாலமாக…, 50 மாணவர்கள் கூட, சுலபமாக அமர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக இர...

ஏணிப்படிகள் - பாகம் 1

மேகலா   : ஏ! கிருஷ்ணா…, இதோ நானும் வாரேன்… கொஞ்சம் நில்லு. என்னால் வேகமா நடக்க முடியல… கிருஷ்ணா…., நில்லு…. கிருஷ்ணர்  : ஹையைய்யோ…., இவ பாத்துட்டாளா…. இனி தப்ப முடியாதே… கேள்வியால என்ன குடைஞ்சிருவாளே… இன்னைக்கு என்ன கேக்கப் போறாளோ…, தெரியலயே… வா, மேகலா… என்ன இந்தப் பக்கம் வந்திருக்க… நான் அப்படியே காத்து வாங்கலாம்னு வந்தேன். உன்னை எதிர்பார்க்கல… அதான் வேகமா போய்க்கிட்டு இருந்தேன்… என்ன…, உன்னை கொஞ்ச நாளா ஆளையே காணோமே… ஊருக்கு எங்கயும் போயிட்டயோ…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. சென்ற வாரம், திண்டுக்கல்லில் உள்ள ‘கல்யாண சௌந்தரராஜப் பெருமாள்’…, ‘சௌந்தரவல்லித் தாயார்’ குடியிருக்கும் கோயிலுக்கும்…, கோட்டை மாரியம்மன் கோயிலுக்கும் சென்றிருந்தோம் கிருஷ்ணா…. அடுத்து நம்ம ஊரில், ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது… எங்க மாமனார் நினைவு நாள்…, என்று அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளினால் எழுத ஆரம்பிக்காமல் விட்டுட்டேன்…  அறிவு வற்றிப் போய் விடுமோ என்று பயந்து போய் …, இன்று எழுத உட்கார்ந்து விட்டேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அறிவு வற்றி விடுமா…! என்ன உளறுகிறாய்…  அறிவு, கல்வி....

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 11 (நிறைவுப் பகுதி)

மேகலா   : நீ எங்களை நினைத்து வருத்தப்படுகிறாயா கிருஷ்ணா…. எனக்கென்னவோ, பிள்ளைகளை வேலை செய்யப் பழக்குவதற்கு அம்மா trick செய்வது பரவாயில்லையோ என்று தோன்றுகிறது…. கிருஷ்ணர்  : நீ சொல்வது சரிதான் என்றாலும், பிள்ளைகளுக்கு, சிறுவயது முதலே, பிறருக்கு உதவ வேண்டும்…, சாப்பிடும் பொருளோ, அல்லது சில ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ மாதிரியான பென்சில், note-book என்ற பொருட்களை, எல்லோருக்கும் share பண்ணணும், ‘சண்டை போடக் கூடாது’, ‘விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று சில கதைகளைக் கூறி புரிய வைக்க வேண்டும்… அப்பத்தான், demand பண்ணும் பொருளை வாங்கிக் கொடுத்தாவது வேலை செய்ய வைப்பது என்பதை ஒத்துக் கொள்ளலாம்… இருந்தாலும், உயர்ந்த உள்ளம் என்பது, சொல்லிக் கொடுத்து வருவதல்ல….. ஆனாலும், ஒரு மனிதனின் வளர்ச்சி, இப்படியும் வளர வாய்ப்பிருக்கிறது… நானும், என் அப்பாவைப் போல…, படித்து doctor ஆவேன் என்பதில் தொடங்கி…, எங்க teacher மாதிரி பாடம் நடத்துவேன்…. கொஞ்சம் வளர்ந்த பின், ‘தோனி’ மாதிரி விளையாடுவேன்… அப்துல் கலாம் மாதிரி scientist ஆவேன்… நானும் pilot ஆவேன்… என்று ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிய வரும் போது, அவர்கள் மாதிரி த...