Posts

பக்குவம் - பாகம் 1

மேகலா   : கிருஷ்ணா…, தினந்தோறும் ஏதும் எழுதாமல் சும்மா இருப்பது…, குற்ற உணர்ச்சியில் குறுகிப் போகிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி எழுதலாமா…. இன்று, மாண்புமிகு நரேந்திர மோடி பேசிய, ‘ரோட்டி காவ்…, இல்லையேல் என் துப்பாக்கியின் கோலி உன்னைத் தேடி வரும்’ – என்று பாகிஸ்தானை எச்சரித்ததை நினைத்து கொந்தளிக்கவா…, என்று திணறித் திணறி மூச்சு முட்டுது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : மூச்சு முட்டெல்லாம் வேண்டாம்… ஏதாவது எழுதணும் என்றால், நல்ல தலைப்பாக யோசி… இன்னும் முடிவுறாத ஆபரேஷன் சிந்தூரை வேறு ஒரு நாள் யோசிக்கலாம்… நிறையப் பேசி, பேசி நானே கொதித்துப் போனேன்… ஏதாவது குளிர்ச்சியாகப் பேசலாம்… மேகலா  : அக்னி நட்சத்திரத்தில், சூரியன் கூட தகிக்காமல், கொஞ்ச நாளாக குளிர்ச்சியாயிருக்கிறான். அது போல, நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒரு இதம் தேவையாக இருக்கு போல…. நீயும் அதைத்தான் சொல்லுகிறாய்… கிருஷ்ணர்  : சரி…, தலைப்பைச் சொல்லு… மேகலா  : எதை எழுதுவது என்று எனக்கும் புரியவில்லை கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இன்று முழுவதும், ‘பக்குவம்’, ‘பக்குவமடைதல்’…, ‘மேன்மை’ – இதைப் பற்றி யோசி… அப்புறம் பேசலாம்… ...

ஆளுமை - பாகம் 12 (நிறைவுப் பகுதி)

மேகலா   : வெள்ளையனைப் பார்த்து, கட்டபொம்மன், ‘நீ யார் என்னிடம் வட்டி கேட்பது?’ – என்று சொல்லிய வசனத்தை, வீட்டிற்கு வந்த பின்னும், ‘கிஸ்தி, வரி, வட்டி…, எங்களுடன் வயலுக்கு வந்தாயா…, நாற்று நட்டாயா…, இல்லை, எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி செய்தாயா? யாரைக் கேட்கிறாய் வட்டி…, மானம் கெட்டவனே’ – என்று நாமும் கட்டபொம்மனாக மாறி, மெய் சிலிர்த்துப் போவோம்… ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே…’ என்ற பாடலைக் கேட்கும் போது…, பாரதியாரைக் காட்டிலும், பாரதியார் வேஷத்தில் நடித்த நடிகர் திலகம் மட்டுமே கண்ணில் தெரிவார்… ‘திருவிளையாடலில்’ மீனவனாக வரும் சிவபெருமான், கடற்கரையோரம் நடக்கும் நடையழகு…, அந்த எம்பெருமான் சிவனையே நினைக்க வைக்கும் கிருஷ்ணா…. எந்தப் பாத்திரத்தைச் சொல்ல…, நாவுக்கரசராய் நடித்த சிவாஜியா…, தொண்டரடிப்பொடியாழ்வாராய் நடித்த சிவாஜியா…, இவ்வளவு ஏன்…,   1960-களில், தமிழக மக்களுக்கு சுதந்திரத்தின் வலியையும், ஆன்மீகத்தின் மேன்மையையும் வெளிப்படுத்திக் காட்டியதில் முக்கிய பங்கு நடிகர் திலகம் சிவாஜி ஐயாவையே சாரும் கிருஷ்ணா…  ‘படிக்காத மேதை’ ரங்கனாகட்டும்…, ‘பாசமலர்’ அண்ணனாகட்டும்…...

ஆளுமை - பாகம் 11

மேகலா   : கிருஷ்ணா…, இன்னொரு கிருஷ்ணர் கிடையாது. அதையும் சேர்த்துச் சொல்லு கிருஷ்ணா…   எத்தனை பேர் சாஸ்திரம் படைத்தாலும், திருக்குறள் எழுதினாலும்…, எல்லாம் ‘கீதை’யின் எதிரொலியே…   எந்த நல்ல சிந்தனையும், கிருஷ்ணரிடமிருந்து வந்தவையே… தைரியம், நம்பிக்கை, உழைப்பு, முயற்சி, பக்தி, தர்மம்…, என்று யார் போதித்தாலும், அது கீதையின் தாக்கத்தினால் வந்ததே…   உலகத்தின் மொத்த ஆளுமையும், ஸ்ரீகிருஷ்ணரும், கீதையும் தான்…. கிருஷ்ணர்  : Ok…, done…bye… மேகலா  : கிருஷ்ணா.., என்ன கிருஷ்ணா…., கிருஷ்ணா, நான் இன்னுமொரு ஆளுமையாளரைப் பற்றி உன்னிடம் சொல்லவில்லை… அதற்கு முன்னே, நீ bye சொல்லிட்டு கிளம்புறியே… நான் யாரிடம் சொல்லுவேன் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இப்ப எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு புலம்புற… யார் அந்த ஆளுமையாளர்…. மேகலா  : ‘யார் அந்த நிலவு…, ஏன் இந்தக் கனவு’ – என்ற பாடலுக்கு…, gentle ஆ…, சோகமா.., இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்ற பாவனையில் சிகரெட்டை ஊதி, ஊதி தன் வேதனையை வெளிப்படுத்துவாரே…, அந்த நடிகர்…, நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் கிருஷ்ணா… அவர் நடிக்கு...

ஆளுமை - பாகம் 10

கிருஷ்ணர்   :   நம்மைக் கவர்ந்த ஆளுமையாளர்களின் உணர்வுகள் எதுவோ, அது நம்மையும் தொற்றி விடும் என்பது உண்மையிலும் உண்மை… மேகலா  : கிருஷ்ணா…, என்னோடு பேசும் போது, என்னோட feeling உனக்கும் தெரிந்து விட்டதா கிருஷ்ணா… மனுஷங்களான நாங்க அப்படித்தான் கிருஷ்ணா… சில விஷயங்களில் எனக்குன்னு தனி கோபமோ, ஆச்சரியமோ…, அதிசயமோ இல்லாத போது கூட, நாம் ரசிக்கும் ஆளுமையாளர்களின் கோபமும், பேச்சுக்களும், அனுசரணையும், நமக்கும் கோபத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி விடும்… இந்த உணர்வுகளால்தான், எங்களுக்கு தேச உணர்வும் கூட வருகிறது கிருஷ்ணா… அதுவும் குறிப்பாக அரசியல் நிகழ்வுகளில், விளையாட்டுப் போட்டிகளில் தான் ஆளுமையாளர்களின் தாக்கம் நம்மையும் அதே உணர்வுகளில் பாடாய்ப் படுத்தும்.. கிருஷ்ணர்  : ஆமாம்…, ஆமாம்… கிரிக்கெட்டில், ’man of the match’ யாரோ…, அவர்கள்தான் அன்றைய hero-வாகவும் ஆகிறார்கள். அடுத்து ஆடும் போது, நேற்றைய sixer-ஐயும், boundary-யையும் எதிர்பார்த்து, மக்களுடைய ஆரவாரமும், விசிலும் எகிறும்…  தன்னை follow பண்ணுபவர்களின் எதிர்பார்ப்பு, ஆளுமையாளர்களிடையே பொறுப்புக்களை அதிகமாக்குகிறத...

ஆளுமை - பாகம் 9

மேகலா   : கிருஷ்ணா…, நாம் கடந்து வந்த பாதைகள், நம் மனதில் பட்டா போட்டு உட்கார்ந்து விடும் என்று சொன்னாயே…, அது great கிருஷ்ணா… இன்னும் ஒரு psychology இருக்கு கிருஷ்ணா…   நம் மனசை முழுசாக ஆக்ரமித்தவர்கள், கோபப்பட்டால் கூட, அந்தக் கோபம் நம்மையும் தொற்றி விடும்   கிருஷ்ணா… கிருஷ்ணர்  : எப்படிச் சொல்லுகிறாய்… மேகலா  : இப்போ…, அரசியலில் நாம் ரசிக்கும் ஒருவர்…, இவர்களால் நம்ம நாடு வளர்ச்சியுறும் என்று யாரை நம்புகிறோமோ…, அவர்கள் கோபப்பட்டு, எதிர்க்கட்சியினர் செய்த தவறை சுட்டிக் காட்டும் போது, அந்தக் கோபம் சாதாரணமாகவே நம்மையும் தொற்றிக் கொள்ளும் கிருஷ்ணா… அதிலும், சமீபத்தில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், ஒரு protest-ல் பங்கு கொண்டு, காவல் அதிகாரியால் சிறை பிடிக்கப்பட்டு, காவலதிகாரியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பத்திரிகையாளர் ஒருவர், மாநிலத் தலைவரிடம், ‘உங்கள் போராட்டமே ஒரு நாடகம்’ என்று இன்னொரு தலைவர் சொல்கிறாரே’ என்று கேட்கிறார். அதற்கு, B. J. P. மாநிலத் தலைவர், ‘அவர் ‘work from home’ politics பண்ணுகிறார்… கோடிக் கணக்கில் ஊழல் நடந்து, அதை எதிர்த்து,...

ஆளுமை - பாகம் 8

மேகலா   : தர்மபுத்திரனுக்கு, ‘ராஜசூய யாகம்’ நடத்த வேண்டும் என்று ஆசை வருகிறது. ஆனால், கிருஷ்ணரோ, ’ஜராசந்தனை அழிக்காமல் ராஜசூய யாகம் நடத்த முடியாது… அதை மீறி நீ செய்தாலும், யாகம் பாதியிலேயே நின்று விடும்’ என்று எச்சரிக்கிறார்…. அதற்கான காரணத்தை பாண்டவர்கள் கேட்க, ’ஜராசந்தன் 100 அரசர்களை ருத்திரருக்கு பலி கொடுத்தால், இந்திரலோகப் பதவி கிடைக்கும் என்ற ஆசையில், 86 அரசர்களை சிறைபிடித்து விட்டான். இன்னும் 14 அரசர்களை பிடித்து விட்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது… அதனால் அவனை அழிக்க வேண்டும்… யாதவ குலத்தையே மதுராவிலிருந்து விரட்டியடித்தவன்’ என்று சொன்னதும், தர்மபுத்திரன் ஜராசந்தனுக்குப் பயந்து, ராஜசூய யாகத்தையே நிறுத்துவதாகக் கூறினான். இதைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணர்,   ‘ஒரு காரியத்தை நடத்த வேண்டாம் என்று சொல்வதற்குக் கூட, அவனால் முடியாது என்ற தகுதி இருக்க வேண்டும்.   ஆனால் ஜராசந்தனை அழிக்கும் வல்லமை கொண்ட பீமனும், அர்ஜுனனும் இருக்கும் போது, முயற்சியே எடுக்காமல் யாகத்தை நிறுத்துவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல.   எடுத்த காரியம் எப்படி ஆனாலும் சரி, ‘முயற்சி’ என்ற ஒன்று இல்லாமல் போனால்...

ஆளுமை - பாகம் 7

மேகலா   : ஆமாம் கிருஷ்ணா…. நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும்…, யார் வல்லவர்கள் என்று…. கிருஷ்ணா…, நான் இன்னொரு விஷயத்தைச் சொல்லட்டா…. கிருஷ்ணர்  : பேசுவதற்குத்தானே, ‘ஆளுமை’யை ஆரம்பித்திருக்கிறோம்… இதில் என்ன permission கேட்கிறாய்… மேகலா  : கிருஷ்ணா…, M. G. R., உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்து, release தேதியை அறிவித்து விட்டார். அவர் புகழிலும், வளர்ச்சியிலும் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் கையில் அரசாங்கம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தை release பண்ண விடக் கூடாது.. அதற்கான விளம்பரங்களையும் தடை செய்து அராஜகம் செய்தனர்… மக்களோ, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்…, படம் எப்போது release ஆகும் என்று. M. G. R. சொன்ன தேதியில் படம் release ஆகும் என்று, எந்த தியேட்டர், எத்தனை மணி show என்பதெல்லாம் சின்னச் சின்ன பெட்டிக் கடைகளுக்கு bit notice மூலம் தகவலை அனுப்புகிறார்… படப் பெட்டியை வழக்கமான முறையில் அனுப்பாமல், ரகசியமாக அனுப்பி, குறித்த தேதியில் release-ம் பண்ணி விட்டார்… ரசிகர்கள் கைக்கு பிரச்னை வந்து விட்டது… இனி படத்தை எந்த அரசாங்கமும் தடுத்து விட ...